'படிகள்' இதழில் வெளியான சிறுகதை
சுவர்
ழான் பவுல் சார்த்தர்
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : ஜனனி (சாரு நிவேதிதா)
அவர்கள் எங்களை ஒரு பெரிய வெள்ளை அறையில் தள்ளினார்கள். அந்த வெளிச்சத்தில் என் கண்கள் கூசின. பின், ஒரு மேஜையையும் அதன் பின்னால் நான்கு சிவிலியன்கள் காகிதங்களைக் கவனித்துக் கொண்டிருப்பதையும் பார்த்தேன். அவர்கள் இன்னொரு கைதிக்கூட்டத்தையும் பின்புறத்தி அடைத்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து கொள்வதற்கு அந்த முழு அறையையும் நாங்கள் கடந்து செல்ல வேண்டியிருந்த்து. அதில் எனக்கு தெரிந்த பலர் இருந்தார்கள்; மற்ற சிலர் வெளிநாட்டவராக இருக்கவேண்டும். எனக்கு முன்னால் இருந்த இருவரும் பொன்னிறமாக இருந்தார்கள்; உருண்டையானமண்டை; இருவரும் ஒரே மாதிரி இருந்தார்கள். ஃப்ரெஞ்சுக்காரர்களாயிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதில் சிறியவன் தன் பேண்ட்டை இழுத்து இழுத்து சரி செய்துகொண்டே இருந்தான் : பீதி.
இப்படியே மூன்றுமணி நேரம் கழிந்தது. நான் மயங்கிய நிலையில் இருந்தேன். என் தலை வெறுமையாகிவிட்ட மாதிரி இருந்தது; ஆனால் அறை நன்றாக உஷ்ணப்படுத்தப்பட்டிருந்ததால் அது எனக்கு உகந்த்தாக இருந்தது; கடந்த இருபத்து நான்கு மணி நேரமாக நாங்கள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தோம். காவல்காரர்கள் கைதிகளை ஒருவர் பின் ஒருவராக மேஜைக்கருகில் கொண்டு வந்தார்கள். அந்த நால்வரும் கைதிகளை அவர்கள் பெயரையும், தொழிலையும் கேட்டார்கள். அநேகமாக அவர்கள் அதற்கு மேல் கேட்கவில்லை-அல்லது ஏதாவது ஒன்றிரண்டு கேள்விகள்: “ வெடி மருந்துக் கிடங்கு நாச வேலையில் உனக்கு ஏதாவது சம்பந்தமுண்டா?” “ஒன்பதாம் தேதி காலையில் நீ எங்கே இருந்தாய்? என்ன செய்து கொண்டிருந்தாய்?” பதிலில் அவர்கள் எந்த அக்கறையும் காட்டவில்லை. கொஞ்ச நேரம் கைதிகளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு எழுத ஆரம்பித்தார்கள்.
டாமிடம்(TOM) அவன் ‘இண்டர்நேஷனல் ப்ரி கேடி’ ல் இருந்தது உண்மையா என்று கேட்டார்கள்; அவர்கள் அவனுடைய கோட்டிலிருந்தே அந்தக் காகிதங்களை கைப்பற்றி இUuIIருந்ததால் அவனால் அதற்கு வேறுவிதமாக பதில் சொல்ல முடியவில்லை. ழுவாலை(Luan) nhNNஅவா்கள் எதுவும் கேட்கவில்லை்; ஆனால் அவன் தன் பெயரைச் சொன்னதும் நீண்ட நேரம் எழுதினார்கள்.
ழுவா(ன்) சொன்னான்: “என் சகோதரன் ஜோஸ்தான் கிளா்ச்சிக்காரன். அவன் இங்கே இல்லை என்று உங்களுக்குத் தெரியும். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை.அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது”.
அவர்கள் பதில் சொல்லவில்லை. ழுவானே மேலும் சொன்னான்;” நான் ஒன்றும் செய்துவிடவில்லை.இன்னொருத்தருக்காக நான் சாக விரும்பவில்லை.
உதடுகள் துடிக்க அவன் பேசுவதை நிறுத்தி, ஒரு காவல்காரன் அவனைக்கொண்டு சென்று விட்டான்.இப்போது என் முறை .
”உன் பெயர் தானே பாப்லோ இபிதா ?: “ஆமாம்”
ரமோ (ன்) க்ரி (ஸ்) எங்கே இருக்கிறான்?
“தெரியாது.
”அவனை நீ ஆறாம் தேதியிலிருந்து பத்தொன்பதாம் தேதி வரை மறைத்து வைத்திருந்தாய்”. “இல்லை”
ஒரு நிமிடம் அவர்கள் ஏதோ ஏழுதினார்கள்.பின் காவல்காரன் என்னையும் கொண்டு சென்று விட்டான். குறுகலான தாழ்வாரத்தில் டாமும் , ழுவானும் இரண்டு காவல்காரர்களோடு காத்துக் கொண்டிருந்தார்கள்.பின் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். காவல்காரர்களில் ஒருவனை டாம் கேட்டான். “இதன் பிறகு?” “பிறகு என்ன?” என்று திருப்பிக் கேட்டான் காவல்காரன்.
“நடந்தது விசாரணையா? தீர்ப்பா?”. “தீர்ப்பு” என்றான் காவல்காரன். “அவர்கள் எங்களை என்ன செய்யப் போகிறார்கள்?” காவல்காரன் வறட்சியாகக் கூறினான், “தண்டனையை உங்களுடைய அறையில் படிப்பார்கள்” சொல்லப் போனால் எங்கள் அறை என்பது ஆஸ்பத்திரியின் நிலவறைகளில் ஒன்று. காற்றின் சுழற்சியால் அங்கே பயங்கரமான குளிராயிருந்தது. இரவு பூராவும் நாங்கள் நடுங்கிக் கொண்டே இருந்தோம், பகலிலும் கூட நிலைமை தேவலாம், என்றுசொல்ல முடியாது. மேலும் கடந்த ஐந்து நாட்களையும் நான் ஒரு துறவி மடத்தின் அறையில்தான் கழித்திருந்தேன். அதன்சுவரின் சிதிலத்தைப் பார்த்த்போது அது கடைக்காலத்தைசோந்த்தாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. கைதிகளும் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அந்த அளவுக்கு இடம் கிடைக்காமல் அவாகள் எங்களை எந்த வகையான இடமாயிருந்தாலும் அதில் அடைத்திருந்தாகள். நான் என் அறையை விட்டுவிடவில்லை. குளிரால் நான் ரொம்பவும் பாதிக்கப்படாவிட்டாலும், நான் தனியாக இருந்தேன். அது கொஞ்ச நேரத்திலேயே எரிச்சலைக் கொடுத்தது. நிலவறையில் என்றால் என்னுடன் சக கைதிகளும் இருந்தார்கள். ழுவா(ன்) எப்போதாவதுதான் பேசினான். காரணம், அவன் பயந்து போய் இருந்தான். மேலும் எதுவும் சொல்லுகிற அளவுக்கு அவனுக்குப் பிராயமும் இல்லை. ஆனால் டாம் அதிகமாகப் பேசுவான். அவனுக்கு ஸ்பானிஷ் ரொம்ப நன்றாகத் தெரிந்திருந்தது. நிலவறையில் ஒரு பெஞ்சும் நான்கு பாய்களும் கிடந்தன. அவர்கள் எங்களை திரும்ப அழைத்துச் சென்றதும் நாங்கள் உட்கார்ந்து கொண்டு மிக அமைதியாகக் காத்திருந்தோம். ரொம்ப நேர அமைதிக்குப் பிறகு டாம் சொன்னான், “நம்மை நன்றாகப் போட்டு ‘ஏறி’ விட்டான்கள்.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் இந்தப் பொடியனை எதுவும் செய்து விடுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றேன் நான்.
“அவனுக்கு எதிராக அவர்களிடம் ஒன்று கூட கிடையாது. அவன் ஒரு குடிப்படைக்கானின் தம்பி, அவ்வளவுதான்” என்றான் டாம்.
நான் ழுவானைப் பார்த்தேன். அவன் கேட்டுக் கொண்டிருப்பது போல் தெரியவில்லை. டாம் மேலும் சொன்னான், “ஸரகோஸாவில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா உனக்கு? ரோட்டி மனிதர்களைப்படுக்க வைத்து அவர்கள் மேல் ட்ரதக்குகளை ஒட விடுகிறார்கள். தப்பி ஒடிவந்த மொராக்க நாட்டுக்காரன் ஒருவன் சொன்னான். இது குண்டுகளை மிச்சம்படுத்துவதற்காகவாம், அவர்கள் சொல்லுகிறார்கள்”.
”பெட்ரோலை அது மிச்சப்படுத்தாது” என்றேன் நான்.
டாமின் மேல் எரிச்சலடைந்தேன்: அவன் அதைச் சொல்லியிருக்கக் கூடாது.
”பிறகு, இதையெல்லாம் ரோட்டில் மேற்பார்வை செய்து கொண்டு நடந்து செல்லும் அதிகாரிகள், பாக்கெட்டில் கைவிட்டுக் கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு போகிறார்கள். அந்த ஆட்களையெல்லாம் சுத்தமாக முடித்துவிடுவார்கள் என்றா நினைக்கிறாய்? அதுதான் இல்லை. அப்படியே அலறிக்கொண்டே இருக்க வைத்து விடுவார்கள். சமயங்களில் ஒரு மணி நேரம், மொராக்கன் சொன்னான். முதல் தடவையாக வாந்தியெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டானாம்.
“அதையே அவர்கள் இங்கேயும் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை, உண்மையிலேயே குண்டுகள் போதவில்லை என்றால் தவிர” என்றேன் நான்.
நான்கு காற்றுத் துவாரங்கள் வழியாக வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. மேல் கூரையில் இடப்பக்கத்தில் அவர்கள் வட்டமான ஒரு திறப்பைச் செய்திருந்தார்கள். அதிலிருந்து வானத்தைப்பார்க்கலாம். வழக்கமாக ஒரு அடைப்பால் மூடியிருக்கும் இந்த துவாரத்திலிருந்துதான் அவர்கள் இந்த நிலவறைக் கிடங்கில் நிலக்கரியைக் கொட்டுவார்கள். அந்த துவாரத்துக்குக் கொஞ்சம் கீழே ஒரே நிலக்கரித் தூளாயிருந்தது; ஆஸ்பத்திரியை உஷ்ணப்படுத்துவதற்கு வேண்டிய நிலக்கரி. ஆனால் போரின் ஆரம்பத்தில் நோயாளிகள் எல்லாம் வெளியேற்றப்பட்டு விட்ட்தால் நிலக்கரி உபயோகப்படுத்தப் படாமலேயே இங்கு தங்கிவிட்ட்து. சமயங்களில் அவர்கள் மறந்துபோய் மேல் திறப்பை மூடாமல் விட்டு இதன்மேல் மழையும் பெய்திருக்கிறது.
டாம் குளிரால் நடுங்க ஆரம்பித்துவிட்டான். “குட் ஜுஸஸ்! பயங்கரமாக குளிருகிறது..., இதோ மறுபடியும்”.
எழுந்து நின்ற அவன் உடல் பயிற்சி செய்ய ஆரம்பித்தான். ஒவ்வொரு அசைவிலும் மார்பில் அவனுடைய சட்டை திறந்தது. ரோமத்துடன், வெள்ளை மார்பு. மல்லாந்து படுத்து, கால்களை உயர்த்தி சைக்கிள் விடுவது போல் கால்களை சுழற்றினான். அவனுடைய பிட்டப் பகுதி துடிப்பதைப் பார்த்தேன். டாம் திடமானவன் என்றாலும் ரொம்ப சதையாகவும் இருந்தான். துப்பாக்கி ரவை அல்லது அதன் கூர்மையான கத்தி முனை இந்த மென்மையான சதைக் குவியலில் எப்படி வெண்ணெயில் செருகுவது மாதிரி சட்டென்று புகுந்து மறையும் என்பதை நினைத்தேன். அவன் மெலிந்தவனாக இருந்திருந்தால் அது இப்படி என்னை நினைக்க வைத்திருக்காது.
நான் உறைந்து போகவில்லை, ஆனால் என் தோள்களையும் மேற்கைகளையும் என்னால் உணரவே முடியவில்லை. சமயங்களில் எதையோ மறந்து போய் விட்டுவிட்ட மாதிரி எனக்குத்தோன்றி, என் கோட் எங்கேயென்று சுற்றிலும் தேடி, பின்புதான் எனக்கு அவர்கள் கோட்டே தரவில்லை என்பது ஞாபத்துக்கு வரும். அது அசெளகர்யமாகவே இருந்தது. எங்களின் சட்டையை மட்டும் விட்டு விட்டு மற்ற துணிமணிகளையெல்லாம் எடுத்து அவர்களின் படைவீரர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். எங்களுக்குக் கிடைத்த்து, நோயாளிகள் வெய்யில் காலத்தில் போட்டுக் கொள்ளும் கித்தான் பேண்ட்தான். கொஞ்ச நேரம் கழித்து டாம் எழுந்து வேகமாக மூச்சுவிட்டுக் கொண்டே எனக்கு அடுத்து உட்கார்ந்தான்.
“கதகதப்பாயிருக்கிறதா?”
“இல்லவே இல்லை. ஆனால் காற்றிலிருந்து தப்பினேன்”
இரவு எட்டு மணி அளவில் ஒரு மேஜர் இரண்டு ஸ்பானிஷ்பாசிஸ்டுகளுடன் வந்தான். அவன் கையில் காகிதமும் இருந்தது. காவல்காரனிடம் அவன் கேட்டான்.
“அந்த மூன்று பேரின் பெயர் என்ன?
“ஸ்டீன்பாக், இபீதா, மீர்பால்” என்றான் காவல்காரன்.
மேஜர் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு லிஸ்டை கூர்ந்து படித்தான்: “ன்டீன்பாக்...ன்டீன்பாக்....ம்.ஆமாம்.
உனக்கு மரண தண்டனை. நாளை காலை உன்னைச் சுடுவார்கள்” மற்ற இருவரின் பெயரையும் தேடிக் கொண்டே போனான். “ம்...அந்த இரண்டு பேரும் கூட இப்படித்தான்.
“அது நடக்காது”, என்றான் ழுவா(ன்), “நான் அதில் கிடையாது” மேஜர் அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கேட்டான்; “உன் பெயர் என்ன?”
“ழுவான் மிபால்”
“சரி, உன் பெயர் இங்கே இருக்கிறது. உனக்கு பரண தண்டனைதான்” என்றான். மேஜர்.
பின், தோள்களைக் குலுக்கிக் கொண்டு மேஜர் டாமையும், என்னையும் பார்த்து திரும்பினான்.
“நீங்கள் பாஸ்க் இனத்தவரா?
“யாரும் பாஸ்க் இல்லை”
எரிச்சலுற்றவன் போல் அவன் பார்த்தான்.
“இங்கு மூன்றுபேர் பாஸ்க் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களைத் தேடிக்கொண்டு என் நேரத்தை நான் வீணடிக்கப் போவதில்லை. ஆக உங்களுக்கு குருமார் தேவையில்லை?
நாங்கள் பதில் சொல்லவில்லை.
“இந்த இரவை உங்களுடன் கழிக்க ஒரு பெல்ஜிய டாக்டர் இப்போது வருவார்” என்று சொன்ன அவன் ஒரு மிலிட்டரி சல்யூட் அடித்து விட்டுப் போய் விட்டான்.
“நான் உன்னிடம் என்ன சொன்னேன், பார்... அதுதான் நடக்கிறது” என்றான் டாம்.
“ஆமாம், இந்தப் பொடியனுக்கு இது ஒரு மோசமான தண்டனைதான்” நாகரிகத்துக்காக அதைச் சொன்னாலும் அந்தப் பொடியனை நான் விரும்பவில்லை., அவன் முகம் ரொம்பவும் மெலிந்தும் பயத்துடனும் இருந்தது. வேதனையால் மிகவும் மாறிப்போய், அவனுடைய எல்லா தன்மைகளும் திரிந்து போய் இருந்தன. மூன்று நாட்களுக்கு முன்னால் அவன் ஒரு மிடுக்கான பையனாக இருந்திருப்பான்; ஆனால் இப்போது ஒரு மருட்சி கொண்ட மாய தெய்வத்தைப் போல இருந்தான். இவனை அவர்கள் வெளியே விட்டு விட்டால் கூட இனி இவன்முன்னைப் போல் இருக்கமாட்டான் என்று நினைத்தேன். இவன் மேல் இரக்கம் கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் இரக்கம் கொள்வது எனக்கு அருவருப்பூட்டுகிறது, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் அது என்னை பயமுறுத்துகிறது. அவன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் முகமும் கைகளும் வெளுத்துப் போயிருந்தன. அவன் மறுபடியும் உட்கார்ந்து தன் உருண்டைக் கண்களால் தரையைப் பார்த்தான். டாம் நல்ல மனதுடையவன். அவன் சிறுவனின் கைகளை ஆறுதலாகப் பற்ற முயன்றான். ஆனால் சிறுவனோ ஆகரோஷமாகத் தன்னை விடுவித்துக் கொண்டு, முறைத்தான். “அவனை விட்டு விடு” என்று தணிந்த குரலில் சொன்னேன், “பார்... அவன் இப்போது கதறி அழப் போகிறான்”
டாம் வருத்தத்துடன் நான் சொன்னவுடன் கீழ்ப்படிந்தான். சிறுவனை அமைதிப்படுத்த அவன் விரும்பியிருக்கலாம். அதனால் நேரமும் கழிந்திருக்கும். இவனும் த்ன்னைப் பற்றி நினைக்காமல் இருந்திருக்கலாம்.
ஆனால் இது எனக்கு எரிச்சல் ஊட்டியது: சாலைப்பற்றி நான் எப்போதுமே நினைத்ததில்லை. எனக்கு அதற்கான காரணமே இருந்ததில்லை; ஆனால் இப்போது இங்கே இருக்கிறது, இருந்தாலும் அதைப் பற்றி நினைப்பதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை.
டாம் பேச ஆரம்பித்தான்: “சொல், நீ எப்போதாவது யாரையும் அடித்து வீழ்த்தியிருக்கிறயா? என்று என்னைக் கேட்டான். நான் பதில் சொல்லவில்லை, அகஸ்டின் ஆரம்பத்திலிருந்து அவன் ஆறு பேரை அடித்து வீழ்த்தியதை விவரிக்க ஆரம்பித்தான்; சூழ்நிலையை அவன் உணரவில்லை. உணர்வதற்கு அவன் விரும்பவுமில்லை என்று நான் சொல்ல முடியும், நானே கூட அதைச் சரியாக உணரவில்லை. அது என்ன ரொம்பவும் துன்புறுத்துமா? துப்பாக்கி ரவைகளைப் பற்றி நினைத்தேன். என் உடம்பில் அது எரிந்து கொண்டு துளைப்பதை கற்பனை செய்தேன். எல்லாமே எதார்த்த்த்திற்கு அப்பால் தான் இருந்தன. ஆனால் நான் அசைவற்று அமைதியாக இருந்தேன்; இரவு பூராவும் இருக்கிறது, அதைப்புரிந்து கொள்ள. சற்று நேரத்தில் டாம் பேசுவதை நிறுத்தினான். நான் ஓரப்பார்வையில் அவனைக் கவனித்தேன்., அவனும் கூட சாம்பல் நிறத்தில் அருவருப்பாகத் தெரிந்ததைப் பார்த்தேன். எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் “இப்போது தான் ஆரம்பிக்கிறது”. கிட்டத்தட்ட இரவாகிவிட்ட்து. மங்கிய ஒளி காற்றுத் துவாரங்களின் வழியே கரித்தூளினூடே ஊடுவி வானம் தெரிந்த இடத்திற்குக் கீழே ஒரு பெரிய கறையாய் பதிந்திருந்த்து. மேற்கூரைத் துவாரத்தின் மூலம் நான் ஏற்கனவே ஒரு நட்சத்திரத்தை பார்த்து விட்டேன். இரவு நிர்மலமாகவும் ரொம்பக் குளிராகவும் இருக்கும். மஞ்சள் பழுப்பு நிற யூனிஃபார்ம் அணிந்த பொன்னிறமான ஒருவன் தொடர இரண்டு காவல்கார்ர்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள் அவன் எங்களுக்கு சல்யூட் அடித்தான்.
“நான் டாக்டர், இனி இருக்கப்போகும் நேரத்தில் உங்களுக்கு உதவ எனக்கு அதிகாரம் இருக்கிறது” என்றான். அவனுக்கு சுபாவமான ஒரு தனிப்பட்ட குரல் இருந்த்து.
“உனக்கு இங்கே என்ன வேண்டும்?” என்றேன் நான்.
“உங்களுக்காக நான் வந்திருக்கிறேன். உங்களுடைய இந்த கடைசி நேரத்தை கஷ்டம் இல்லாததாக ஆக்க என்னால் முடிந்த எல்லாம் செய்வேன்”
“அதற்கு இங்கே ஏன் வந்திருக்கிறாய்? இந்த ஆஸ்பத்திரியிலேயே தான் வேறு நிறைய பேர் இருக்கிறார்களே?”
“நான் இங்கு அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பற்ற பார்வையுடன் பதில் சொன்னான் அவன்”... உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டுமா? என்று அவசரமாகக் கேட்ட அவன்” என்னிடம் சிகரெட் இருக்கிறது... சுருட்டு கூட இருக்கிறது” என்றான்.
எங்களுக்கு இங்கிலீஷ் சிகரெட்டு கொடுத்தான். ஆனால் நாங்கள் அதை வாங்கிக் கொள்ளவில்லை, நான் அவன் கண்களையே பார்த்தேன். அவன் எரிச்சலடைந்தவன் போல் தெரிந்தான். அவனிடம் நான் சொன்னென்: “ நீ இங்கு அருள் பாலிக்க வந்திருக்கும் தூதன் இல்லை. அதோடு, எனக்கு உன்னைத் தெரியும். நான் கைதான அன்று உன்னை ஃபாஸிஸ்டுகளுடன் ராணுவமுகாம் முற்றத்தில் பார்த்தேன்”
தொடர்ந்து பேசியிருப்பேன், ஆனால் ஆச்சர்யகரமாக எனக்கு ஏதோ நேர்ந்த்து; இந்த டாக்டரின் வருகையில் எனக்கு அதற்கு மேல் ஈடுபாடு இருக்கவில்லை. பொதுவாக நான் இப்படிச் செய்வதில்லை. ஆனால் பேசுகிற விருப்பம் முழுசாக என்னை விட்டுப் போய்விட்ட்து, தோள்களைக் குலுக்கிக் கொண்டு கண்களை அவனிடமிடருந்து அகற்றினேன். கொஞ்ச நேரம் சென்று தலையை உயர்த்தினேன்; அவன் என்னை ஆச்சர்யத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான் காவல்காரர்கள் ஒரு பாயில் உட்கார்ந்திருந்தார்கள். உயரமாய் மெலிந்திருந்த பெத்ரோ விரல்களை நெட்டி முறித்துக் கொண்டிருந்தான்; அடுத்தவன், தூங்கி விழுந்து விடாமல் இருக்க தலையை அடிக்கடி நிமிர்த்திக் கொண்டிருந்தான்.
“விளக்கு வேண்டுமா?”- திடீரென்று டாக்டரிடம் பெத்ரோ கேட்டான், அவனும் ஆமாம் என்று தலையாட்டினான். அவன் மரக்கட்டையைப் போல் இருப்பதாக எனக்குத் தோன்றியது, ஆனால் நிச்சயமாக அவ்வளவு கெட்டவன் இல்லை.
அவனுடைய உணர்ச்சியற்ற நீல நிறக் கண்களைப் பார்த்தபோது இவனுடைய ஒரே குற்றம், கற்பனை இவனிடம் குறைந்திருந்த்துதான் என்று தோன்றியது. பெத்ரோ போய் ஒரு எண்ணெய் விளக்கைக் கொண்டு வந்து பெஞ்சின் ஓரத்தில் வைத்தான், மந்தமான வெளிச்சம் தான் என்றாலும் ஒன்றுமில்லாததற்கு இது தேவலாம். அவர்கள் எங்களை சென்ற இரவு வெறும் இருட்டிலேயே விட்டிருந்தார்கள். மேற்கூரையில்விளக்கு எற்படுத்திய வட்டமான வெளிச்சத்தையே நீண்ட நேரம் கவனித்துக்கொண்டிருந்தேன். என்னை அது மிகவும் ஈர்த்த்து. பிறகு திடீரென்று எழுந்தேன். வெளிச்ச வட்டம் மறைந்து விட்டது. மிகப்பெரிய சுமையின் கீழ் நசுக்கப்படுவதைப் போல் உணர்ந்தேன்.
சாலைப் பற்றிய நினைவோ அல்லது பயமோ இல்லை; அது பெயரற்ற ஒன்று. என் கன்னம் எரிந்த்து. தலை வலித்தது
என்னையே சிலுப்பிக் கொண்டு என் இரண்டு நண்பர்களையும் பார்த்தேன். டாம் தன் முகத்தை கைகலில் புதைத்துக் கொண்டிருந்தான். என்னால் அவனுடைய வெண்மையான பிடரியை மட்டும் தான் பார்க்க முடிந்தது. பொடியன் ழுவானின் நிலைதான் மோசம். அவன் வாய் திறந்திருந்தது. மூக்கின் ஓரம் துடித்தது. டாக்டர் அவனருகில் சென்று அவனைத் தேற்றுவது போல் தோள்களில் கையை வைத்தான்: ஆனால் அவன் கண்கள் உணர்ச்சியற்று இருந்தது பின் அந்த பெல்ஜியனின் கை ழுவானின் தோளிலிருந்து கை வரைக்கும் வஞ்சகமாக இறங்கி வந்ததைப் பார்த்தேன். ஆனால் ழுவான் இதில் கவனம் செலுத்தவில்லை. பெல்ஜியனும் விடாமல் கொஞ்சம் முன்னால் போய் எனக்குத் தன் பின்புறத்தைக் காட்டிக் கொண்டு ழுவானின் கையைத்தன் மூன்று விரல்களுக்கிடையில் எடுத்தான். ஆனாலும் நான் பின்னால் கொஞ்சம் சாய்ந்து கொண்டு பார்த்தேன்; அவன் பாக்கெட்டிலிருந்து வாட்சை எடுத்து ஒரு கணம் பார்த்தேன். ஒரு நிமிடம் பொறுத்து கையை அசைவற்று கீழே விட்டுவிட்டு தான். பின் சட்டென்று ஏதோ அந்த இடத்திலேயே குறித்தாக வேண்டிய முக்கியமான ஒன்று ஞாபகம் வந்த்து போல் பாக்கெட்டிலிருந்து குறிப்பேட்டை எடுத்து எழுதினான். ‘பாஸ்டர்ட்...என்னிடம் வந்து அவன் என் நாடியைப் பார்க்கட்டும். வந்து அவன் அழுகல் மூஞ்சியில் ஒரு குத்து விடுகிறேன்.’
அவன் வரவில்லை. ஆனால் என்னை அவன் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் தலையை உயர்த்தி, பார்த்தேன்.
“உனக்கு இங்கு குளிராகத் தெரியவில்லை” என்று பொதுவாக என்னிடம் கேட்டான். அவன் குளிரால் மிகவும் பாதிக்கப்பட்டு, அவன் நிறமே கன்றிப் போயிருந்தது.
“எனக்கு குளிரவில்லை” என்றேன்.
அவன் என்னை விட்டுத் தன் கண்களை எடுக்கவேயில்லை. திடீரென நான் உணர்வு வந்து புரிந்து கொண்டேன். என் கைகள் என் முகத்தைத் தொட்டன. நான் வியர்வையில் குளித்திருந்தேன். இந்த நிலவறையில், இந்த குளிர் காலத்தில் இந்த ஈரக்கசிவுக்கு மத்தியில் நான் வியர்த்திருந்தேன். கைகளால் தலைமயிரைக் கோதினேன். அது வியர்வையில் கோந்து போல் ஒட்டிக் கொண்டிருந்த்து. என் சட்டையும் ஈரத்தால் என் உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்த்தைப் பார்த்தேன். சொட்டச் சொட்ட ஒரு மணி நேரமாக வியர்த்திருந்தும் நான் அதை உணர்ந்திருக்கவில்லை. அந்த பெல்ஜியம் பன்றிப் பயல் இதைக் கவனிக்கத் தவறவில்லை. வேர்வைத் துளிகள் என் கன்னத்தின் மீது வழிவதைப் பார்த்து அவன் நினைத்திருக்க வேண்டும். ‘ பயப்பிராந்தியின் உச்சக்கட்டமாக உடம்பில் ஏற்படும் வெளிப்பாடு தான் இது’ என்று தான் சாதரணமாக இருந்த்து அவனுக்குப் பெருமையாக இருந்த்திருக்கும் நான் எழுந்து நின்று அவன் முகத்தைக் கிழித்தெறிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நான் ஒரு சிறிய அசைவை ஏற்படுத்துவதற்குள் என்னுடைய கோபமும் அவமானமும் மறைந்தன; அந்த பெஞ்சு மீதே சோர்வுடன் விழுந்தேன்.
என் கர்சீஃசிபால் கழுத்தைத் துடைத்துக் கொள்வதில் திருப்திபட்டுக் கொண்டேன்; ஏனென்றால் இப்போது வியர்வை தலைமுடியிலிருந்து என் க்ழுத்தில் விடுவதை உணர்ந்தேன். விரைவில் துடைப்பதால் பயனில்லை. எப்போதோ கர்சீஃப் வியவையில் நனைந்து ஈரமாகி விட்ட்து. ஆனால் இன்னும் வேர்த்துக் கொட்டிக் கொண்டுதான் இருந்த்து. என் புட்ட்த்தில் கூ வேர்த்து என் ஈரம்மன கால் சராய் பெஞ்சுடன் ஒட்டிக் கொண்ட்து. திடீரென்று ழுவான் பேசினான்: “நீ டாக்டரா?”
“ஆமாம்” என்றான் பெல்ஜியன்.
“அது வலிக்குமா...ரொம்ப நேரம்?”
“எப்போது...ம் இல்லை” என்ற பெல்ஜியன் மேலும் சொன்னான், “இல்லவே இல்லை...ரொம்ப சீக்கிரம் அது முடிந்து போய்விடும்” ஒரு பணவாழ்க்கையாளனை அமைதிப்படுத்துவது போல் பதில் சொன்னான் அவன். “ஆனால் நான்... என்னிடம் சொன்னார்கள். சில சமயங்களில் அவர்கள் ரெண்டு முறை சுட வேண்டுமென்று!”
”சில சமயங்களில்...” தலையாட்டிக் கொண்டே பெல்ஜியன் சொன்னான், “முதல் குண்டு முக்கிய உறுப்புகளுக்குப் போகாமல் இருந்து விடலாம்”
“பிற்கு அவர்க்ள் மறுபடியும் துப்பாக்கியை நிரப்பி குறி பார்த்து எல்லாவற்றையும் திரும்பிச் செய்ய வேண்டுமா?”
கொஞ்ச நேரம் யோசித்து விட்டு கம்பலான குரலில் தொடர்ந்தான் “அது ரொம்ப நேரம் எடுக்குமே!”
வேதனையில் பயம் பயங்கரமாக இருந்தது. அவனுக்கு, அவன் நினைத்தெல்லாம் அதைப்பற்றி நினைக்கவேயில்லை, என்னை வியர்க்க வைத்தும் வேதனையின் பயமல்ல்.
நான் எழுந்து கரித்தூசு குவியலை நோக்கி நடந்தேன். குதித்தெழுந்த டாம் என்னை நோக்கி வெறுப்பு மிகுந்த பார்வையை வீசினான். என் ‘ஷீ’ கிரீச்சிட்ட்தால் நான் அவனை எரிச்சலூட்டியிருந்தென். என் முகமும் அவனுடையதைப் போல மண்ணைப்போன்று இருக்கிறதா என்று ஆச்சர்யப்பட்டென். அவ்னும் வியர்த்துக் கொட்டியிருந்த்தைப் பார்த்தேன். வானம் பிரமாதமாக இருந்த்து அந்த இருட்டு மூலைக்குள் ஒளி ஊடுருவவில்லை அறை துவாரத்தைப் பார்க்க த்லையை மட்டும் தூக்க வேண்டியிருந்த்து. ஆனால் அது முன்பிருந்த்தைப் போல் இல்லை. சென்ற இரவு ஒரு பெரிய வான் பிரதேசத்தைப் பார்க்க மூடிந்தது, என்னுடைய ம்டாலய அறையிலிருந்து பகலின் ஒவ்வொரும்ணினேரமும் ஒரு வித்தியாசமான நினைவை என்னுள் கொண்டு வந்தது. காலையில் வானம் கடினமாகி வெளிர்னீலமாயிருந்த போது ‘அட்லாண்டிக்’கின் கடற்கரைகளை நினைத்தேன், நடுப்பகலில் சூரியனைப் பார்த்தேன். ஸ்வெலெ ஹோட்டலில் மதிவைக் குடித்து ஆலிவ்வும், அங்கோவி மீன்களும் சாப்பிட்ட மதுபானக் கடையை நினைத்துக் கொண்டேன்; உச்சி வேளைகளில் நிழலில் இருந்தேன். அங்கு ஒரு பாதி கதிரொளியில் பாதியின் மீது படர்ந்திருக்கும் அடர்ந்த நிழ்லை நினைத்தென்; இப்படி முழு பளபளக்க மறு முழு உலகையும் வனத்தில் பிரதிபலிக்க்க் கான்பது கடினமாயிருந்த்து. ஆனால் இப்போது மனம் போல் என்னால் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். எதையும் அது என்னுள் தூண்டிவிடவில்லை. அதுவே ந்ல்லதாகப்பட்டது எனக்கு நான் திரும்பி வந்து டாமின் அருகில் உட்கார்ந்தேன். ஒரு நீண்ட கணத்திற்குப்பிறகு-
டாம் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தான். அவன் பேச வேண்டியிருந்தது. இல்லாவிட்டால் தன் மனதிலேயே தன்னை அவனால் அடையாளம் கண்டு கொண்டிருக்க முடியாது. என்னிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான், என்று நினைத்தேன். ஆனால் என்னைப் பார்த்துப் பேசவில்லை அவன். வெலிறிப் போ, வியர்த்து நான் இருந்த நிலையில் என்னைப் பார்க்க நிச்சயமாக அவனுக்குப் பயம் தான். நாங்கள் இருவரும் ஒத்திருந்தோம். ஒருவரை மற்றவர் பிரதிபலிக்க, கண்ணாடியை விட மோசமாக இருந்தோம். அவன் பெல்ஜியனைப் பார்த்தான்; பெல்ஜியன்; உயிருள்ளவன்.
“உனக்குப் புரிகிறதா? எனக்குப் புரியவில்லை” என்றான், டாம்.
நானும் மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தே பெல்ஜியனைப் பார்த்தேன். “ஏன், என்ன விஷயம்?”
“என்க்குப் புரியாத ஏதோ ஒன்று நமக்கு நடக்கப் போகிறது”
டாமைச் சுற்றி வித்தியாசமான நாற்றம் அடித்த்து. நாற்றத்தை மற்றவர்களைவிட நான் எளிதில் உணரக் கூடியவன் என்று எனக்குப் பட்ட்து. நான் நகைத்தேன். “இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து கொள்வாய்”
’அது தெளிவாக இல்லை’, என்று பிடி வாதமாகச் சொன்ன அவன், “னான் தைரியமாக இருக்க நினைக்கிறேன். ஆனால் குறைந்த படசம் எனக்கு ஒன்று தெரிய வேண்டும்... கேட்டுக் கொள். அவர்கள் நம்மை வெளிக்கட்டு முற்றத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறார்கள். சரி, நமக்கு எதிரில் நிற்கப் போகிறார்கள். எவ்வளவு பே?”
“எனக்குத் தெரியாது, ஐந்துபே அல்லது எட்ட்டுபேர். அதைவிட அதிகம் இல்லை” “சரி...எட்டு பேர் இருப்பார்கள். யாராவது ஒருவன் கத்துவான்: “குறிபார்” என்று உடனேஎட்டு துப்பாக்கிகள் என்னைப் பார்த்துக் குறி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பேன். எப்படி சுவருக்குள் புகுந்து வெலியே போய்விட முடியும் என்ரு யோசிப்பேன். முதுகை சுவரில் அழுத்தி என் சக்தி முழுவதையும் வைத்து தள்ளுவேன். ஆனால், ஒரு தீக்கனவில் வருவது மாதிரி சுவர் அப்படியே இருக்கும் என்னால் அது எல்லாவற்றையும் கற்பனை செய்ய முடிகிறது. எவ்வளவு சரியாக என்னால் இதை கற்பனை செய்ய முடிகிறது என்பது உனக்கு மட்டும் தெரிந்தால்...”
”சரி...சரி... என்னாலும் கற்பனை செய்ய முடிகிறது” என்றேன் நான்.
“பயங்கரமான வேதனை அது. உன்னை சின்னா பின்னாப்படுத்த அவர்கள் உன்கண்களையும் வயையும் குறிபார்க்கிறார்கள் தெரியும உனக்கு?”- வெறுப்போடு அவன் தொடர்ந்தான்: “ஏற்கனவே என்னால் காயத்தை உணர முடிகிறது. தலையிலும் கழுத்திலும் கடந்த ஒரு மணி நேரமாக வலி இருந்து கொண்டு இருக்கிறது. சாதரண வலி அல்ல, மோசமானதை நாளை காலை நான் உணரப் போவது இது தான். பிறகு என்ன?”
அவன் என்ன சொன்னான் என்று எனக்கு நன்றாகப் புரிந்த்து.போல் நடந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. என்னுள்ளும் வலிகள் இருந்தன, ஏராளமான சின்னச்சின்ன காயங்கள் போல் உரலில் வலி அதற்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியவிலை. ஆனால் நான் அவனைப் போல இருந்தேன், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
அவன் தனக்குத் தானே பேச ஆரம்பித்தான். பெல்ஜியனை கவனித்துக் கொண்டிருப்பதை அவன் விடவில்லை. பெல்ஜியன் கேட்டுக் கொண்ட்ருந்த்தாக தோன்றவில்லை. அவன் என்ன செய்ய வ்ந்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதில் அவனுக்கு ஈடுப்படு இல்லை; எங்களுடைய உடல்களைத்தான் பார்க்க வந்திருக்கிறான், உயிறோடு இருந்தும் வேதனையால் மரித்துக் கொண்டிருக்கும் உடல்க்ளை.
“இது ஒரு தீக்கறை மாதிரி இருக்கிரது.” டாம் சொல்லிக் கொண்டிருந்தான்.” நீ எதையோ யோசிக்க விரும்புகிறாய். எல்லாமே ஸ்ரீயாக இருப்பது மாதிரி உனக்குப் புரிபடுவதாக உணர்வு ஏற்படுகிறது பிறகு அது நழுவி உன்னிடம் இருந்து த்ப்பித்து மங்கலாகி விடுகிறது. பிரகு ஒன்றுமே இருக்கப் பொவதில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொல்கிற்ன். ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று என்க்குத் தெரியாது. சி ல ச்மயங்களில் அனேகமாக அது எனக்குத் தெரிகிறது...பிறகு அது மங்கிப் பொகிரது. மருபடியும் வலியைப் பற்ரி, துப்பாக்கி ரவை பற்றி, வெடிச்சத்த்த்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விடுகிரேன். நிச்சயமாக உனக்குச் சொல்கிறேன், நான் ஒரு மெடீரியலிஸ்ட்; நான் பைத்தியமாகவில்லை. ஆனால் ஏதோ இருக்கிறது என் பிணத்டை நானே பார்க்கிறேன். அது கஷ்டமல்ல, ஆனால் பார்ப்ப்பது நானே தான்; என் க்ண்ணாலேயே எதையும் இனிமேல் நான் பார்க்கப்போவதில்லை, இந்த உலகம் மற்றவர்களுக்காக இருக்கப் பொகிறது என்பதை நான் நினைக்க் வேண்டிருக்கிறது. இப்படி நினைப்படிற்காக உருவானவர்கள் அல்ல நாம்,பாப்லோ, என்னை நம்பு, ஏற்கனவே ஒரு முழு இரவும் எதற்காகவோ காத்திருந்து கழித்து விட்டேன். ஆனால் இதுவும் அதுவும். ஒன்ற்ல்ல. இது நம்மைப் பின்பற்றி ஊர்ந்து வரும், பாப்லோ. அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ள முடியாதவர்களாய் நாம் இருப்போம்”
“வாயை மூடு..என்னை ஒரு சாமியாரை கூப்பிடச் சொல்கிறாயா? என்றேன் நான்.
அதற்கு அவன் பதில் சொல்லவில்லை, நான் ஏற்கனவே கவனித்திருந்தேன், என்னை பாப்லோ என்று குரலற்ற தொனியில் அழைத்து ஒரு தீர்க்கதரிசியைப்பொல் நடந்து கொள்ளும் போக்கு அவனிடம் இருந்த்து. எனக்கு அது பிடிக்கவில்லை, ஆனால் எல்லா ஐரிஷ்கார்ர்களும் இப்படித்தான் என்று படுகறது, அவன் மேல் மூத்திர வாடை அடிப்பதைப் போல் ஒரு நிச்சயமற்ற உணர்வு ஏற்பட்ட்து. அடிப்படையில் நான் டாமிடம் இரக்கம் கொள்ளவில்லை. இதற்கு மேல் ஒன்றாகப் போகிறோம் என்ற பாவனையில் எதற்காக இரக்கம் கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரிபடவில்லை, மற்றவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இது வேறுவிதமாக இருந்திருக்கலாம். உதாரணமாக ரமோ(ன்) க்ரி(ஸ்) ஆனால் டாமுக்கும் ழுவானுக்கும் இடையில் நான் என்னைத் தனியனாக உணர்ந்தேன். இருந்தாலும் அது எனக்குக் கொஞ்சம் பிடித்திருந்த்து, ரமோனோடு இன்னும் கொஞ்சம் நான் நெருக்கமாகப் பழகி இருக்கலாம். ஆனால் நான் அப்போது பயங்கரமாக இருறுதிப் போய் இருந்தேன். அப்படியே தான் இருக்கவும் விரும்பினேன்.
ஏதோ ஒரு வித சித்த பேதத்தோடு அவன் வார்த்தைகளை மென்று கொண்டிருந்தான். நிச்சயமாக அவன் தன்னை யோசிப்பதிலிருந்தும் விடுவித்துக் கொள்வத்ற்காகவே பேசினான். அவனிடமிருந்து மூத்திரவாடை அடித்துக் கொண்டிருந்த்து, வாஸ்தவத்தில் நான் அவனோடு ஒத்துப்போனேன், அவன் சொன்ன ஒவ்வொன்றையும் நான் சொல்லியிருக்க்க்கூடும், மரித்துப் போவது இயற்கையானதல்ல, நான் சாகப் போவதால் எதுவுமே எனக்கு இயற்கையனதாகத் தோன்றவில்லை. கரித்தூசுகளின் இந்தக் குவியல், இந்த பெஞ்ச், பெத்ரோவின் அசிங்கமான முகம் எதுவுமே, டாமைப் போல் அதையே நினைத்துக் கொண்டிருப்பது மட்டும் எனக்குத் திருப்தியானதாயில்லை, மேலும் இரவு பூராவும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் நாங்கள் ஒரே விஷயங்களை ஒரே நேரத்தில் நினைத்துக் கொண்டேயிருப்போம் என்ரு என்க்குத் தெரியும், அவனைப் பக்கவாட்டில் நான் பார்த்தேன். முதல் முறையாக அவன் எனக்கு வித்தியாசமாகத் தோன்றினான். மரணத்தை முகத்தில் பூசிக் கொண்டு இருந்தான். என் கர்வம் காயமுற்றது. கடந்த இருப்த்து நான்கு மணி நேரமும் டாமுக்க்ருகில் நான் வாழ்ந்திருந்தேன், அவனுக்கு செவி சாய்த்திருந்தேன். அவனிடம் பேசி இருந்தேன். மேலும் எங்களுக்குள் பொதுவான அம்சம் என எதுவும் இல்லையென்று எனக்குத் தெரியும், ஒன்றாக சாகப்போகிறோம் என்ற காரணத்தால் மட்டுமே இப்போது நாங்கள் இருவரும் இரட்டைச் சகோத்ர்ர்கள் போல் ஒத்திருந்தோம், டாம் என்னைப்பார்க்காமலேயே என் கையை எடுத்துக் கொண்டான்.
“பாப்லோ, நான் ஆச்சரியப் படுகிறேன்... ஒவ்வொன்றும் முடியப் போகிறது என்பது நிஜந்தானா என்று பிரமிப்பாய் இருக்கிறது”
என் கைகளை விடுவித்துக் கொண்டு நான் சொன்னேன்: “டேய் பன்றி, உன் கால்களுக்கிடையில் பார்”
அவன் பாதங்களுக்கிடையில் ஒரு குட்டை தேங்கியிருந்த்து. அவன் கால் சராயிலிருந்து துளிகல் கொட்டின.
“ என்ன அது?” மிரண்டு போய் கேட்டான் அவன்.
“உன் கால் சட்டையில் நீ மூத்திரம் போகிறாய்”. என்றேன் அவனிடம்.
“இல்லையே இல்லை. நான் மூத்திரம் போகவில்லை. நான் அப்படி உணரவும் இல்லை” என்று வெறியோடு சொன்னான்.
பெல்ஜியன் எங்கலை நெருங்கினான், “உடல்நிலை சரியில்லையா?” என்று பொய்யான கவலையோடு கேட்டான்.
டாம் பதில் சொல்லவில்லை. பெல்ஜியன் அந்தக் ‘குட்டை’யை பார்த்தான். ஒன்றும் சொல்லவில்லை.
“இது என்னவென்று எனக்குத் த்ரியாது,” கடுங்கோபத்தொடு சொன்னான் டாம், ஆனால் நான் பயப்படவில்லை”
பெல்ஜியன் பதில் சொல்லவில்லை” டாம் எழுந்து சிறுநீர் கழிப்பதற்காக மூலைக்குச் சென்றான். பட்டனைப் போட்டுக் கொண்டு திரும்பி வந்து ஒரு வார்த்தை பேசாமல் உட்கார்ந்தான். பெல்ஜியன் ‘னொட்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்தான்.
நாங்கள் மூவரும் அவ்னை கவனித்துக் கொண்டிருந்தோம். ஏனென்றால் அவன் உயிரோடு இருந்தான். உயிருள்ள மனித ஜீவனின் அசைவுகல், கவலைகள் அவனிடம் இருந்தன. உயிருள்ள ஒன்று நடுங்க வேண்டிய முறையில் முறையில் அவனும் அந்த அறையில் நடுங்கினான். அவனுக்குக் கட்டுப்பட்ட நன்றாக ஊட்டம் பெற்ற உடல் அவனுக்கு. மீதி இருந்த நாங்கள் எங்களுடைய உடல்களை உணரவேயில்லை- உணர்ந்தாலும் நிச்சயமாக அதே வித்த்தில் அல்ல. கால்களுக்கிடையில் என் கால்சராயை நான் உணர விரும்பினேன். ஆனால் துணியவில்லை. கால்களின் மீது த்ன்னை நிலை நிறுத்துக் கொண்டிருந்த பெல்ஜியனைப் பார்த்தேன். தன் தசைகளின் எஜமான்ன். நாளையைப் பற்றி நினைக்க முடிகிற ஒருவன் அங்கே தான் நாங்கல் இருந்தோம். மூன்று ரத்தமற்ற நிழல்கள். அவனைப் பார்த்து அவனுடைய வாழ்க்கையை ரத்த காட்டேரியைப் பொல் உறிஞ்சிக் கொண்டோம்.
கடைசியில் அவன் சிறுவன் ழுவானிடம் சென்றான். அவனுடைய கழுத்தை தொழில் ரீதியில் தொட விரும்பினானா அல்லது கருணையின் தூண்டுதலுக்கு உட்பட்டானா? கருணையால் அவன் நடந்து கொண்டிருந்தால் அந்த ‘முறை’ தான் இரவு பூராவிலும் அப்படி அவன் நடந்து கொண்ட்து.
முவானின் த்லையையும் கழுத்தையும் அவன் அணைத்துக் கொண்டான். அந்தச் சிறுவனும் எதிர்ப்பைக் காட்டவில்லை; அவனுடைய கண்கள் பெல்ஜியனை விட்டு அகலவே இல்லை. திடீரென்று இவன் கைகளைப் பிடித்துக் கொண்டு விநோதமாக அதைப் பார்த்தான். பெல்ஜியனுடைய கைகளை தன் இரண்டு கைகளுக்கிடையே வைத்துக் கொண்டான். அவைகளைப் பற்றி சந்துஷ்டியைத் தரல் கூடியது எதுவும் இல்லை. எரண்டு வெளிறிய எடுக்கி அந்தக் கொழுத்துச் சிவந்த கையைப் பற்றிக் கொண்டிருந்தன. என்ன நடக்கப் போகிறது என்று நான் சந்தேகித்தேன். டாமும் அப்படியே சந்தேகித்திருக்க்க்கூடும். ஆனால் பெல்ஜியன் எதையும் பார்க்கவில்லை ஒரு தந்தையைப் போல் அவன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அந்தக் கொழுந்துச் சிவந்தகையை சிறுவன் தன் வாய்க்கிக் கொண்டு வந்து கடிக்க முயன்றான். பெல்ஜியன் அவசரமாக கையை இழுத்துக்கொண்டு இடறி சுவரில் இடித்துக் கொண்டான். சில நொடிகள் எங்களைப் பீதியொடு பார்த்தான். திடீரென்று அவனுக்கு உறைந்திருக்கும், நாங்கள் அவனைப் போல் மனிதர்கள் அல்ல என்று’ நான் சிரிக்க ஆரம்பித்தேன். ஒரு காவலாளி உல்லே குதித்தான். இன்னொருவன், விழித்த க்ண்கள் வெற்றாய்ப்பார்க்க தூக்கத்தில் இருந்தான்.
நான் தளர்வாக உணர்ந்தேன். அதேசமயம் அதிக உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். விடிகாலையில் என்ன நடக்கும் என்பது பற்றியோ அல்லது சாவைப் பற்றியோ இனிமேல் நான் யோசிக்க விரும்பவில்லை. அதற்கு அர்த்தம் இருக்கவில்லை. சூன்யத்தையோ அல்லது வார்த்தையாயோ தான் நான் கண்டேன். ஆனால் வேறு எதையேனும் நினைக்க முற்சி செய்த மாத்திரத்தில் என்னை நோக்கித் திரும்பியிருக்கும் துப்பாக்கி முனைகல் கண்ணுக்குத் தெரிந்தன. என் மரண தண்டனையை அநேகமாக இருபது முறை நான் அனுபவித்தேன். அதுவும் நல்லதுக்குத்தான் என்று கூ ஒரு சமயம் நினைத்தேன். ஒரு நிமிடம் நான் தூங்கியிருக்க வேண்டும். அவர்கல் என்னை சுவருக்கு இழுத்துச் சென்றார்கள்; நான் போராடிக் கொண்டிருந்தேன்; கருணைக்காக கெஞ்சினேன் வாரிச்சுருட்டி எழுந்து பெல்ஜியனைப் பார்த்தேன் நான் தூக்கத்தில் கத்தியிருப்பேனோ என்று பயந்தேன். ஆனால் அவன் தன் மீசையைத் தடவிக் கொண்டிருந்தான். அவன் எதையும் கவனித்திருக்கவில்லை. விரும்பிருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்கியிருக்கலாம் என்று நினைத்தேன். நாற்பதேட்டு மணி நேரமாக நான் விழித்துக் கொண்டிருக்கிறேன் – நான் என்னுடைய வரம்பின் இறுதியில் இருந்தேன்.
ஆனால் இரண்டு மணி நேர வாழ்க்கையை நான் இழக்க விரும்பவில்லை. விடிகாலையில் என்னை எழுப்ப வருவார்கள். தூக்க்க் கலக்கத்தோடு நான் அவர்கள் பின்னே செல்வேன். “ ஊப் eneEஎன்பதைத் தவிர வேறு எப்படியும் அரற்றியிருக்கமாட்டேன், நான் அதை விரும்பவில்லை, ஒரு மிருகத்தைப் போல் சாக விரும்பவில்லை நான், அதைப் புரிந்து கொள்ள விரும்பினேன், மேலும் தீக்கரை காண்பது பற்றியும் பயமாக இருந்தது. எழுந்து, என் நினைவுகளை மாற்றிக் கொள்ள முன்னும் பின்னும் நடந்தேன், என் கடந்து போன வாழ்க்கையைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன், ஒரு நினைவுக்கூட்டமே திரும்ப என்னுள் ஓடி வந்தது, அவற்றில் நல்லவை கெட்டவை இரண்டுமே இருந்தன-குறைந்த பட்சம் முன்னால் அவைகளை அப்படி அழைத்தேன். முகங்களும் நிகழ்ச்சிகளும்... ஃபெரியாவின் போது வாலன்ஸியாவில் குத்திக் கிழிக்கப்பட்ட சிறிய நொவில்லரோவின் முகத்தை, என்னுடைய ஒரு மாமாவின் முகத்தை, ரமோ(ன்) க்ரி(ஸ்)யின் முகத்தை நான் பார்த்தேன். என் முழு வாழ்க்கையையும் நான் நினைவில் கொண்டிருந்தேன்; 1926 இல் எப்படி மூன்று மாதங்கள் வேலையை விட்டு இழந்தேன், எப்படி சாகும் நிலைக்குப் பட்டினி கிடந்தேன் என்பதை நினைத்தேன், க்ரனாடாவில் பெஞ்சில் கழித்த இரவை நினைத்துக் கொண்டேன்: அப்போது நான் மூன்று நாட்களாக சாப்பிட்டிருக்கவில்லை, கோபம் கொண்டிருந்தேன். செத்துப் போக விரும்பவில்லை நான். அந்த நினைவு என்னைச் சிரிக்க வைத்தது. எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக சந்தோஷத்தின் பின்னால் ஓடியிருக்கிறேன்! ஏன்? ஸ்பெய்னை விடுவிக்க விரும்பினேன், மார்சலைக் போற்றினேன், புரட்சி இயக்கத்தில் சேர்ந்தேன், பொதுக்கூட்டங்களில் பேசினேன். அழிவற்றன் போல் எல்லாவற்றையும் தீவிரமாக எடுத்துக் கொண்டேன்.
அந்தக் கணத்தில் என் முழு வாழ்க்கையையும் என் முன்னால் நிற்பதாக உணர்ந்தேன். பின் ‘அது மோசமான பொய்’ என்று நினைத்தேன். அது எதற்கும் லாயக்கற்றதாயிருந்தது. ஏனென்றால் அது முடிந்து போயிருந்தது, பெண்களோடு சேர்ந்து சிரிக்க முடிந்ததை, நினைத்து பிரமித்தேன். இப்படி இறப்பேன் என்று மட்டும் கற்பனை செய்திருந்தால் சுண்டு விரலைப் போல் இப்படி ஆடியிருக்க மாட்டேன். என் வாழ்க்கை முடிந்து போய் மூடப்பட்ட பையைப் போல் என் முன்னே கிடந்தது, இன்னும் அதன் உள்ளிருந்த ஒவ்வொன்றும் அரைகுறையாயிருந்தது, ஒரு நொடி அதைக் கணிக்க முயன்றேன். இது ரம்மியமான வாழ்க்கை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ள விரும்பினேன். ஆனால் என்னால் அந்தக் கணிப்பையும் கொள்ள முடியவில்லை; அது ஒரு வெள்ளோட்ட வரைகோடாகத்தான் இருந்தது, என் நாட்களை, நித்தியத்தை எண்ணியே பாசாங்கு செய்து கழித்து விட்டேன். ஆனால் நான் புரிந்து கொண்டது என்றுமேயில்லை, எதையும் நான் தவறவிடவில்லை: நான் தவற விட்டிருக்கக் கூடிய விஷயங்கள் நிறையவே இருந்தன. ம்துவின் சுவை அல்லது ஸாடக்கின், அருகில் அந்தச் சின்ன கடற்கூம்பில், கோடையில், குளித்த அனுபவங்கள் இப்படி, ஆனால் மரணம் ஒவ்வொன்றையும் கவர்ச்சியிழக்கச் செய்துவிட்டது.
பெல்ஜியனுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றி எங்களிடம் சொன்னான்: “நண்பர்களே, ராணுவ நிர்வாகம் அனுமதித்தால் உங்களுக்கு நேசமானவர்களுக்கு ஏதாவது செய்தியோ அல்லது ஞாபகச் சின்னமோ அனுப்ப ஏற்பாடு செய்வேன்”
டாம் முணுமுணுத்தான்: “எனக்கு யாரும் இல்லை”
நான் ஒன்றும் சொல்லவில்லை, சற்றுநேரம் காத்திருந்து விட்டு டாம் ஆர்வத்தோடு என்னைப் பார்த்தான், நீ கோஞ்சாவுக்கு சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா?” “இல்லை”
இம்மாதிரி மென்மையான விஷயங்களை நான் வெறுத்தேன். கடந்த இரவில் கோஞ்சாவைப் பற்றிப் பேசியது என் தவறு தான். என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவளோடு நான் ஒரு வருடம் இருந்தேன். கடந்த இரவு அவளை மறுபடியும் ஒரு ஐந்து நிமிடம் பார்ப்பதற்காக ஒரு சமிக்ஞை செய்திருக்கலாம்; அதனால் தான் நான் அவளைப் பற்றிப் பேசினேன். அது அவ்வளவு வலுவாய் இருந்திருக்கிறது, இனிமேல் அவளைப் பார்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை, அவளிடம் சொல்வதற்கு இதற்கு மேல் என்னிடம் ஒன்றுமில்லை: அவளை என் தோளில் சாய்த்துக் கொள்ளக் கூட விரும்ப மாட்டேன். என் உடல் என்னுள் திகிலை இறைத்திருந்தது. ஏனென்றால் அது வெளிறிப்போய் வியர்த்துக் கொண்டிருந்தது, மேலும் அவளுடைய உஅடல் என்னுள் திகிலை நிறைக்கவில்லை என்று எனக்கு நிச்சயமில்லை, நான் இறந்துவிட்டேன் என்று அறிந்து அவள் அழுவாள் அதற்குப் பிறகு பல மாதங்களுக்கு அவளுக்கு வாழ்க்கையில் சுவையிருக்காது, ஆனால் இருந்தாலு சாகப் போகிறவன் நானாகத் தான் இருந்தேன். அவளுடைய மிருதுவான அழகிய கண்களை நினைத்தேன். அவள் என்னைப் பார்த்த போது அவளிடமிருந்து ஏதோ ஒன்று என்னுள் கடந்தது. ஆனால் அது முடிந்து போய்விட்டது என்று நான் அறிவேன்: இப்போது அவள் என்னைப் பார்த்தால், பார்வை அவளுடைய கண்களிலேயே நிற்கும்; என்னுள் செல்லாது. நான் தனித்துப் போனேன்.
டாமும் தனியாகத் தான் இருந்தான்; ஆனால் இந்த ரீதியில் அல்ல. குறுக்காக கால்களைப் போட்டுக் கொண்டு ஒருவிதப்புன்னைகையோடு அங்கிருந்த பெஞ்சை வெறித்துப்பார்க்க ஆரம்பித்திருந்தான் அவன், பிரமித்தவனாய் தென்பட்டான். கைகளை நீட்டி எதையாவது உடைத்து விடுவோமோ என்ற பயத்தில் தானே என்னவோ, ஜாக்கிரதையாக பெஞ்சைத் தொட்டு விடு உடனே வேகமாக கையை இழுத்துக் கொண்டு நடுங்கினான். நான் டாமாக இருந்திருந்தால் பெஞ்சைத் தொட்டு நான் குதூகலித்திருக்க மாட்டேன். இது மேலும் ஒரு ஐரிஷ் மடத்தனம். ஆனால் பொருட்கள் விநோத உருக்கொண்டு இருப்பதை நானும் பார்க்கத்தான் செய்தேன். அவைகள் சரியாகப் புரியாமல், தெளிவற்று, சாதாரணத்தைவிட குறைந்த அடர்த்தியோடு இருந்தன. நான் சாகப்போகிறேன் என்று உணர்வதற்கு இந்த பெஞ்ச், விளக்கு, கரித்தூசுக் குவியல் இவற்றைப் பார்ப்பதே போதுமானதாயிருந்தது. வாஸ்தவத்தில் என்னால் மரணத்தைப் பற்றி தெளிவாக சிந்திக்க முடியவில்லை. ஆனால் அதை ஒவ்வொரிடத்திலும்-பொருள்களின் மீது, அவைகள் விழுந்து தூரத்தில் கிடந்த முறையில்-இப்படி எல்லாவற்றிலும் நான் அதைப் பார்த்தேன். சாகப் போகிற ஒருவனின் படுக்கைக்கருகில் நின்றுகொண்டு மெதுவாகப் பேசுகிறவர்களைப் போல் அதைப் பார்த்தேன். டாம் இப்போது பெஞ்சில் தொட்டது கூட அவனுடைய மரணத்தைத் தான்.
நான் இருந்த நிலையில் யாராவது வந்து என்னுடைய மீதி வாழ்க்கை பூராவையும் என்னிடம் கொடுத்து அமைதியாக வீட்டுக்குப் போகச் சொன்னால் அது என்னை உறைய வைத்திருக்கும். அழிவற்றிருக்கும் மாயையை விட்ட பிறகு பல மணி நேரங்களோ அல்லது பல வருடங்களோ காத்திருப்பது எல்லாம் ஒன்றுதான், நான் சூனியத்தை ஒட்டிக் கொண்டேன். ஒரு விதத்தில் நான் அமைதியாக இருந்தேன். ஆனால் இது ஒரு பயங்கரமான அமைதி, என் உடலால் ஏற்பட்ட அமைதி, என் உடலை அதன் கண்களால் நான் பார்த்தேன் அதன் காதினால் நான் கேட்டேன். ஆனால் இதற்கு மேல் அது நானாக இல்லை. அது தானே வியர்த்து நடுங்கியது. இதற்கு மேல் நான் அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. என்ன நேர்ந்தது என்பதை அறிய அதை நான் தொட்டுப் பார்க்க வேண்டியிருந்தது. அதை இன்னொருவனின் உடலைப் போல் சில சமயங்களால் இன்னமும் என்னால் உணர முடிந்தது. விமானத்திலிருந்து கொண்டு செங்குத்தாக இறங்குவது போல் மூழ்கலையும் விழுதல்களையும் நான் உணர்ந்தேன்-என் இதயம் அடித்துக் கொள்வதை உணர்ந்தேன், ஆனால் அது என்னை மறுபடியும் நிச்சயப்படுத்தவில்லை. நிறைய சமயங்களில் இந்த உடல் அமைதியாக இருந்தது. ஒருவித பளுவைத் தவிர வேறு எதையும் நான் உணரவில்லை. என் சம்பந்தப்பட்ட ஒரு அசிங்கமான இருப்பு; ஒரு பெரிய ஜந்துவோடு கட்டப்பட்டிருப்பது போன்ற ஒர் உணர்வு ஒரு முறை என் கால்சராயை உணர்ந்தேன். அவைகள் நனைந்திருந்தன. அது மூத்திரமா வியர்வையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாக கரிக்குவியலுக்குச் சென்றேன், சிறுநீர் கழிக்க.
பெல்ஜியன் தன் கடிகாரத்தைப் பார்த்து விட்டுச் சொன்னான்: “இப்போது மணி மூன்றரை ஆகிறது”
“பாஸ்டர்ட்! வேண்டுமென்றே அவன் அதைச் செய்திருக்கவேண்டும். டாம் குதித்தான். நேரம் ஓடிக் கொண்டிருப்பதை நாங்கள் கவனிக்கவில்லை. விசனமான உருவமற்ற கட்டியைப் போல் இரவு எங்களைச் சூழ்ந்தது. அது ஆரம்பித்திருந்தது என்பதை என்னால் நினைக்கக் கூட முடியவில்லை.
சிறுவன் ழுவா(ன்) அழ ஆரம்பித்தான். “நான் சாக விரும்பவில்லை. என்று கை கூப்பி கெஞ்சினான். அந்த அறையின் குறுக்கே கையை வீசிக் கொண்டு ஒடிய அவன் அழுது கொண்டே ஒரு பாயில் விழுந்தான். டாம் அவனை தேற்ற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சங் கூட இல்லாம்ல், கண்களில் நீர் தளும்ப அவனைப் பார்த்தான். ஏனென்றால் தேற்றுவது அந்த வேதனைக்கு முன்னால் தகுதியற்றதாய் இருந்தது. அச் சிறுவன் எங்களை விட அதிகம் சத்தம் போட்டான். ஆனால் நாங்கள் குறைந்த அலவி பாதிக்கப்பட்டோம். தஜுரத்தின் வேதனையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நோயாளியைப் போல் அவன் இருந்தான்; ஜுரம் இல்லாதபோது இது ரொம்பவும் சீரியஸான ஒரு விஷயம்.
அவன் அழுதான், தன்னையே அவன் நொந்து கொண்டிருந்தான் என்று என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவன் மரணத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. ஒரு நொடி-ஒரே ஒரு நொடி நான் அழ விரும்பினேன். என்னையே நொந்து கொண்டு அழ விரும்பினேன். ஆனால் அதற்கு எதிரானது தான் நடந்தது. நான் அவனைப் பார்வையிட்டேன். அவனுடைய எலும்பான விசும்பும் தோள்களைப் பார்த்தேன். குரூரமாக, மனிதத் தன்மையற்று உணர்ந்தேன். என்னையே அல்லது மற்றவர்களையோ கண்டு என்னால் அனுதாபப்பட முடியவில்லை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்” நான் சுத்தமாக சாக விரும்புகிறேன்”
டாம் எழுந்தான் வட்டமான திறப்புக்குக் கீழே தன்னை நிறுத்தி காலை வெளிச்சத்திற்காகப் பார்க்க ஆரம்பித்தான். நான் சுத்தமாகச் சாகத்தீர்மானித்தேன். அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் டாக்டர் எங்களிடம் நேரம் சொல்லியதிலிருந்து நேரம் பறந்து கொண்டிருப்பதாக, ஒவ்வொரு துளியாக பறந்து செல்வதாக உணர்ந்தேன்.
டாமின் குரலை நான் கேட்டபோதும் இருட்டாகவே இருந்தது. “அவர்கள் வருவது கேட்கிறதா?”
“ம்...”
முற்றத்தில் ஆட்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.
“என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்? இருட்டில் அவர்களால் சுட முடியாது”
சற்று நேரம் கழித்து எந்த சப்தமும் கேட்கவில்லை. நான் டாமிடம் சொன்னேன்:
“விடிந்து விட்டது”
பெத்ரோ கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்தான், விளக்கை அணைக்கச் சென்றான். தன் சகாவிடம் சொன்னான்.” பயங்கரமாக குளிருகிறது.
அந்த அறை முழுவதும் வெளிறியிருந்தது, தூரத்தில் துப்பாக்கியின் வெடிச் சப்தத்தைக் கேட்டோம்.
“ஆரம்பித்து விட்டது... அவர்கள் இதை கோர்ட்டின் பின்புறம் தான் செய்வார்கள்” என்று டாமிடம் சொன்னேன்.
டாம் டாக்டரிடம் சிகரெட் கேட்டான்,. நான் அதை விரும்பவில்லை. எனக்கு சிகரெட்டோ மதுவோ தேவையிருக்கவில்லை. அந்தக் கணத்திலிருந்து அவர்கள் சுடுவதை நிறுத்தவேயில்லை.
“என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிகிறதா? என்று கேட்டான் டாம்.
அவன் இன்னும் ஏதோ சொல்ல விரும்பினான் ஆனால் அமைதியாக் கதவைப் பார்த்துக் கொண்டிருந்தான். கதவு திறந்து ஒரு லெஃப்டினன்ட் நான்கு வீரர்களோடு உள்ளே வந்தான் டாம் சிகரெட்டை கீழே போட்டு விட்டான்.
“ஸ்டீன் பாக்?”
டாம் பதில் சொல்லவில்லை பெத்ரோ அவனைச் சுட்டிக் காட்டினான்.
“ழுவா(ன்) மிர்பல்?”
“அதோ அந்தப் பாயில்”
“எழுந்திரு” என்றான் லெஃப்டினன்ட்.
ழுவா(ன்) நகரவில்லை. இரண்டு வீரர்கள் அவனைத் தோளைப்பிடித்து தூக்கி நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் விட்டமாத்திரத்தில் அவன் விழுந்தான்.
வீரர்கள் தயங்கினார்கள்.
“அவன் தான் ஒன்றும் முதல் நோயாளியல்ல” என்றான் லெஃப்டினன்ட், “நீங்கள் இரண்டுபேரும் இவனைத் தூக்கிச் செல்லுங்கள் அவர்கள் அங்கே நெருக்கி வைப்பார்கள்” அவன் டாமைப் பார்த்துச் சொன்னான். “நலம் போகலாம்”. இரண்டு வீரர்களுக்கிடையில் டாம் வெளியே போனான். மற்ற இருவர் சிறுவனை கக்கத்தையும், கால்களையும் பிடித்துத் தூக்கிக் கொண்டு பின்னால் போனார்கள். அவன் மயங்கி இருக்கவில்லை. அவன் கண்கள் அகலத் திறந்திருந்தன. கண்ணீர் கண்களில் வழிந்தோடியது. நான் வெளியே போக விரும்பிய போது லெஃப்டினன்ட் என்னை நிறுத்தினான்.
“நீ தான் இபீதா வா?”
“ஆமாம்”
“நீ இங்கேயே இரு. உனக்காக அவர்கள் பிறகு வருவார்கள்”. கூட அவர்க்ள் அகன்றார்கள். பெல்ஜியனும் இரண்டு ஜெயிலர்களும் கூடப் போய்விட்டார்கள். நான் தனியாக இருந்தேன். எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. அவர்கள் உடனே அதைச் செய்து முடித்திருந்தால் நன்றாக ஏற்றுக் கொண்டிருப்பேன். அநேகமாக சீரான இடைவெளி விட்டு துப்பாக்கிச் சூடு கேட்டது. ஒவ்வொன்றின் போதும் நான் நடுங்கினேன். தலை மயிரைப் பிய்த்துக் கொண்டு அலற நினைத்தேன். ஆனால் பற்களைக் கிட்டிக் கொண்டு பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டேன். ஏனென்றால் நான் அமைதியாக இருக்க விரும்பினேன்.
ஒரு மணி நேரம் கழித்து என்னை எடுத்துக் கொண்டு செல்ல அவர்கள் வந்தார்கள். முதல் கட்டுக்கு இட்டுச் சென்றார்கள். சூடாகி, சுருட்டு நாற்றம் அடித்துக் கொண்டிருந்த சிறிய அறைக்குள் இட்டுச் சென்றார்கள். அங்கே இரண்டு அதிகாரிகள் நாற்காலியில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முழங்காலின் மீது காகிதங்கள் இருந்தன.
”நீ தான் இபீதாவா?”
“ஆமாம்”
“ரமோ(ன்)” க்ரி(ஸ்) எங்கே?”
“எனக்குத் தெரியாது”
என்னைக் கேள்வி கேட்டவன் குட்டையாக தடிமனாக இருந்தான், கண்ணாடிக்குள் அவன் கண்கள் கடினமாகத் தெரிந்தன.
”இங்கே வா என்று என்னிடம் சொன்னான். அவனிடம் சென்றேன், அவன் எழுந்து என் தோள்களைப் பற்றினான் இந்தப் பூமிக்குள்லேயே என்னைத் தள்ளி விடக் கூடிய பார்வையோடு என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் தன் முழுச் சக்தியோடு என் கைச் சதைகளைக் குத்தினான். எனக்கு அது வலிக்கவில்லை. பெரும் விளையாட்டாக இருந்தது, என்னை அவன் ஆக்ரமிக்க விரும்பினான், நாற்றம் அடிக்கும் அவன் மூச்சை நேராக என் முகத்தின் மீது ஊத வேண்டும் என்றும் நினைத்தான். சில கணங்கள் அப்படியே இருந்தோம். எனக்கு சிரிக்கத் தோன்றியது. சாகப் போகிற ஒருவனை பயமுறுத்திக் கட்டாயப் படுத்த ரொம்பவும் பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது. அது பலிக்கவில்லை. முரட்டுத்தனமாக என்னை பின்னே தள்ளி விட்டு மறுபடியும் உட்கார்ந்து கொண்டான் பின் என்னிடம் சொன்னான்:’’ அவனுடைய உயிருக்குப் பதிலாக உன்னுடைய உயிர் இருக்கிறது, அவன் எங்கேயிருக்கிறான் என்று நீ சொல்லி விட்டால் உன் உயிரை நீ காப்பற்றிக் கொள்ளலாம்.
சாட்டைக் கோல், பூட்ஸ் சகிதமாக இருக்கும் இந்தப் பொம்மைகளும் கூட சாகத்தான் போகின்றன: எனக்குப் பின் கொஞ்சம் பொறுத்து-ஆனால் ரொம்பக்காலம் பொறுத்து அல்ல. கசங்கியிருந்த காகிதங்களில் பெயர்களைத் தேடுவதில் அவர்கள் மும்முரமாக இருந்தார்கள். மற்றவர்கள் பின்னால் ஒடினார்கள். அவர்களை சிறையில் அடைத்துப் போட. ஸ்பெய்னின் எதிர்காலம் பற்றியும் மற்ற விஷயங்கள் குறித்தும் அவர்களுக்கு கருத்துக்கள் இருந்தன. அவர்களின் செயல்கள் எல்லாம் எனக்கு அதிர்ச்சி தரக் கூடியதாகவோ சிரிப்பு மூட்டுவதாகவோ இருந்தன, என்னை அவர்கள் இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. அவர்கள், பைத்தியங்கள் என்று நான் நினைத்தேன்.
அந்தச் சிறிய மனிதன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். கையிலிருந்த சாட்டைக் கோலால் பூட்ஸைத் தட்டிக் கொண்டிருந்தான் உயிருள்ள ஒரு வெறிபிடித்த மிருகத்தின் உருவத்தைக் கொடுக்கும் வகையில் அவனுடைய அசைவுகள் கணக்கிடப்பட்டிருந்தன.
”ஆக, உனக்குப் புரிகிறதா?”
“ரமோ(ன்) க்ரி(ஸ்) எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியாது. அவன் மாட்ரிட்டில் இருந்தான் என்று நினைத்திருந்தேன், என்று பதில் சொன்னேன்.
இன்னொரு அதிகாரி வெளிறிய தன் கையை சோம்பலோடு நீட்டினான். அந்தச் சோம்பல் கூட கணக்கிடப்பட்டிருந்த்து. இப்படியெல்லாம் கூடச் செய்து தங்களை கிளர்ச்சியூட்டி கொள்கிற இவர்களின் இந்தச் சீண்டல்களைப் பார்க்க முடியமால் நான் மயங்கி இருந்தேன். “நினைத்து பார்ப்பதற்கு இன்னும் உனக்கு கால் மணி நேரம் இருக்கிறது”, என்று அவன் மெதுவாகச் சொன்னான். ”இவனை லாண்டிரிக்கு எடுத்துச் சொல்லுங்கள். கால் மணி நேரத்தில் திருப்பி எடுத்து வாருங்கள். பிறகும் இவன் மறுத்தால் அந்த இடத்திலேயே அவனுடைய மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
தாம் செய்வது இன்னதென்று அவர்களுக்குத் தெரிந்தேயிருந்தது இரவையெல்லாம் துளி துளியாகக் கழித்திருக்கிறேன்; பிறகு டாமையும் ழுவானையும் சுட்டுத் தள்ளி, அறையில் ஒரு மணி நேரம் என்னைக் காக்க வைத்தார்கள். இப்போது சலவை அறையில் என்னைப் பூட்டி வைக்கிறார்கள்; தங்கள் விளையாட்டை இவர்கள் முந்திய இரவே தயார் செய்திருக்க வேண்டும். நரம்புகள் நைந்து போவதாக அவர்கள் தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்கள். அந்த முறையிலேயே நானும் ஆவதை நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மிக மோசமாக தவறு செய்து விட்டார்கள். சலவை அறையில் ஒரு ஸ்டூல் மீது நான் உட்கார்ந்தேன். ரொம்பவும் பலகீனமாக உணர்ந்தேன். பின் யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்களைப் பற்றியல்ல ரமோ(ன்) க்ரி(ஸ்) எங்கே இருந்தான் என்று எனக்குத் தெரியும்; அவன் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களோடு நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் ஒளிந்து இருந்தான் அவர்கள் என்னைச் சித்திரவைச் செய்தாலொழிய அவன் மறைந்திருந்த இடத்தை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனக்குத் தெரியும் (ஆனால் அவர்கள் அதைப் பற்றி யோசிப்பதாகத் தெரியவில்லை) எல்லாமே கச்சிதமாக, பூரணமாக சீராக்கப்பட்டிருந்தது. எவ்விதத்திலும் என்னை ஈர்க்கவில்லை என் நடத்தைக்குக் காரணத்தை மட்டும் புரிந்து கொள்ள நான் விரும்பியிருப்பேன். ரமோனை கைவிட்டு விடுவதை விட நானே செத்துப் போவேன், ஏன்? ரமோ(ன்) க்ரி(ஸ்)யை அதற்கு மேல் நான் விரும்பவில்லை. கோஞ்சாவிடம் கொண்டிருந்த என் காதலும், ரமோ(ன்) க்ரி(ஸ்) நட்பும், அதே சமயம் , வாழ வேண்டும் என்ற ஆசையும் கூட விடிகாலைக்குச் சற்று முன்பே செத்துப் போய் விட்டன. சந்தோசமில்லாமல் நான் அவனைப் பெரிதாகவே நினைத்தான். அவன் கடினமானவனாக இருந்தான். ஆனால் அந்தக் காரணத்துக்காக நான் இந்த இடத்தில் செத்துப் போவதில் திருப்தி கொள்ளவில்லை, அவனுடைய வாழ்க்கை என்னுடையதைவிட அதிக மதிப்புடையதல்ல; மேலும் எந்த வாழ்க்கையுமே மதிப்புடையது அல்ல. அவர்கள் சுவரோடு ஒருவனை நிறுத்தி அவன் சாகும் வரை சுட்டுக் கொல்கிறார்; அது நானாகவோ ரமோ(ன்) க்ரி(ஸ்)யாகவோ அல்லது வேறு யாராகவுமே இருந்தாலும் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஸ்பெய்னுக்கு என்னைவிட அவன் ரொம்பவும் பயனுள்ளவன் என்று நான் அறிவேன். ஆனால் ஸ்பெய்னும் அதன் புரட்சியும் எக்கேடும் கெட்டுத் தொலையட்டும் என்று எண்ணினேன், ஆம் எதுவுமே முக்கியமில்லை இருந்தாலும் நான் அங்கேயே இருந்தேன். என் உடம்பை நான் காப்பாற்றிக் கொண்டு ரமோ(ன்) க்ரி(ஸ்)யை நான் கைவிட்டிருக்க முடியும். அதைச் செய்ய நான் மறுத்த விட்டேன். அது எனக்கு எப்படியோ கோமாளித்தமாய் தெரிந்த்து. அது பிடிவாதம் தான் என்று நான் நினைத்தேன். ஆம், முரட்டுப் பிடிவாதமாகத்தான் இருக்கவேண்டும்” ஒருவித களிப்பு என்னுள் படர்ந்த்து. எனக்காக வந்த அவர்கள் இரண்டு ஆதிகாரிகளீடம் என்னைக் கொண்டு சென்றார்கள். என் பாத்த்திற்கு அடியிலிருந்து ஒரு எலி ஓடி என்னை மிகவும் ஆச்சர்யப்பசுத்தியது. ஒரு ஸ்பெயின் பாஸிஸ்டை திரும்பிப் பார்த்து நீ எலியைப் பார்த்தாயா? என்று கேட்டேன்.
அவன் பதில் சொல்லவில்லை. அவன் மயக்கமற்று தெளிவாக இருந்தான். தன்னை ரொம்பவும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருருந்தான். நான் சிரிக்க விரும்பினோன். என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். ஏனென்றால் ஆரம பித்துவிட்டால் பின் நிறுத்தவேk முடியாமல் போய்விடுமோ என்று பயமாக இருந்தது. அந்த பாஸிஸ்ட் மீசை வைத்திருந்தான். மடைய, உன், மீசையை நீ எடுத்தாகவேண் ஜீவனின் ரோmmமம் தன் முகத்தை ஆக்ரமிக்க விட்டுவிடுவான் என்று நினைத்த போது சிரிப்பாய்வந்தது. அவன் என்னைத்திடவுறுதியின்றி உதைத்தான். நான் அமைதியாக இருந்தேன். “சரி, நீ அதைப் பற்றி யோசித்துவிட்டாயா? என்று அந்தத் தடிமனான அதிகாரி கேட்டான்.
அபூர்வமான ஜந்துக்களைப் பார்ப்பது போல் மிகவும் ஆர்வத்தோடு அவர்களைப் பார்த்தேன் “ரமோ(ன்) க்ரி(ஸ்) எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியும். இடுகாட்டில் அவன் ஒளிந்திருக்கிறான். அடி நிலக் கல்லறை, இல்லாவிட்டால் வெட்டியான குடில்” என்று அவர்களிடம் சொன்னேன்.
அது ஒரு கேலிக் கூத்து தான். அவர்கள் எழுந்து நின்று பெல்ட்டை இறுக்கிக் கொண்டு சுறுசுறுப்பாகக் கட்டளைகள் இடுவதைப் பார்க்க விரும்பினேன்.
அவர்கள் குதித்து நின்றார்கள். “ நாம் போகலாம். லெஃப்டினன்ட் லோப்பெயிடமிருந்து பதினைந்து பேரை அழைத்து வா” என்று அந்த சிறிய தடித்த மனிதன் சொன்னான். ‘நீ சொல்வது உண்மையானால் உன்னைப் போக விட்டுவிடுவோம். ஆனால் எங்களை குரங்காக்க நினைத்தாயானால் நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்று என்னிடம் சொன்னான். ஒரே பேச்சுச் சத்தத்திற்கிடையில் விட்டுச் சென்றார்கள். நான் ரொம்ப அமைதியாக பாஸிஸ்டுகளின் காவலில் காத்திருந்தேன். அவர்கள் தேடப் போகும் வேடிக்கையை எண்ணி இடைக்கிடையே சிரித்துக் கொண்டேன். சமாதிக் கற்களைகற்றி ஒவ்வொரு கல்லறைக் கதவையும் திறந்து அவர்கள் தேடு வதை கற்பனை செய்து பார்த்தேன். என்னை வேறு யாராகவோ கற்பித்துக் கொண்டு இந்த சூழ்நிலையை எனக்கே பொருத்திப் பார்த்துக் கொண்டேன். இந்தக் கைதி பிடிவாதமாக கதாநாயகனாய் நடந்து கொள்ள, இந்த மீசை வைத்த பாஸிஸ்டுகளும் அவர்களின் ஆட்களும் சீருடையில் சமாதிகளுக்கிடையில் ஓடும் காட்சி!-தாங்கமுடியாத சிரிப்பாயிருந்தது. ஒரு அரை மணி நேரங் கழித்து அந்த தடித்த குட்டை மனிதன் தனியாகத் திரும்பி வந்தான். என்னைக் கொல்வதற்கான உத்திரவுடன் வந்திருக்கிறான் என்று எண்ணினேன். மற்றவர்கள் இடுகாட்டில் தங்கி இருக்கவேண்டும்.
அதிகாரி என்னைப் பார்த்தான். அவன் பார்வை செம்மறியாட்டுத் தனமாக இல்லை. “இவனை முற்றத்திற்குள் மற்றவர்களோடு எடுத்துச் செல்லுங்கள்” என்றான். “ராணுவ வேலைகளுக்குப் பிறகு இவனை என்னசெய்வது என்று ஒரு கோர்ட் முடிவு செய்யும்” என்று மேலும் சொன்னான். எனக்கு இது புரிந்ததாக தோன்றவில்லை. “பிறகு அவர்கள் என்னை... என்னை சுடப் போவதில்லையா?” என்று கேட்டேன். “இப்போது இல்லை, எப்படியும் அப்புறம் என்ன நடக்கிறது என்பது எங்கள் வேலையில்லை”
இன்னும் எனக்குப் புரியவில்லை. “ஆனால்... ஏன்? என்று கேட்டேன்.
பதில் சொல்லாமல் தோள்களைக் குலுக்கிக் கொண்டு வீரர்கள் என்னை எடுத்துச் சென்றார்கள். அந்தப் பெரிய முற்றத்தில் கிட்ட்த்தட்ட நூறு கைதிகள் இருந்தார்கள். பெண்கள், குழந்தைகள், சில வயதானவர்கள். மத்தியிலிருந்த புல் தரையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தேன். நான் மயங்கியிருந்தேன். மதியம் ‘மெஸ் ஹாலில் எங்களை சாப்பிடவிட்டார்கள் இரண்டு மூன்று ஆட்கள் என்னை ஏதோ கேட்டார்கள். எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் பதில் சொல்லவில்லை. நான் எங்கிருக்கிறேன் என்று கூட எனக்குத் தெரியாது.
மாலையில் பத்து கைதிகளை கோர்ட்டுக்குள் தள்ளினார்கள். கார்ஸீயாவை அடையாளம் கண்டு கொண்டேன். ரொட்டி தயாரிப்பவன் என்ன ஒரு அதிர்ஷ்ட்சாலி நீ! உன்னை உயிரோடு பார்ப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை” என்றான் என்னிடம்.
“அவர்கள் மரண தண்டனை தான் முதலில் கொடுத்திருந்தார்கள். பிறகு மாற்றிக் கொண்டார்கள். ஏனென்று இன்னும் தெரியவில்லை” என்று சொன்னேன் “என்னை இரண்டு மணிக்கு கைது செய்தார்கள்” என்றான் கார்ஸியா.
”ஏன்”- அரசியலோடு கார்ஸியாடுக்கு எந்த வித சம்பந்தமும் கிடையாதென்று எனக்கு தெரியும்.
“தெரியாது... அவர்களைப் போல் சிந்திக்காத ஒவ்வொருவரையும் கைது செய்கிறார்கள்.” என்ற அவன் மெல்லிய குரலில் சொன்னேன்: “அவர்கள் ரமோ(ன்) க்ரி(ஸ்) யைப் படித்துவிட்டார்கள்”
“எப்போது?”- நான் நடுங்க ஆரம்பித்தேன்
“இன்று காலை தன் கஸினேடு ஏதோ விவதம் என்று அவ்னை விட்டு செவ்வாய்க் கிழமையே வந்து விட்டான். அவனை மறைத்து வைக்க ரொம்ப்ப்போர் இருந்தார்கள். ஆனுல் அவன் யாருக்கும் எப்படியும்கடன்பட நினைக்கவில்லை. இபீதாவின் இடத்தில் போய் ஒளிந்து கொளபவ எ இடுகாட்டில் போய் ஒளிந்து koகொள்கிறேன்’ என்று சொல்லி விட்டுப்போனேன்”
“இடுகாட்டிலா?”
“ஆமாம்” எவ்வளவு பெரிய மடையன். இன்று காலை மூன்று மணிக்கு அவர்கள் அங்கேப் போனார்கள். இது நடக்கு மென்று நிச்சயமாய் இருந்திருக்கிறது. அவர்கள் அவனை வெட்டியான் குழலில் கண்டு பிடித்தார்கள்”
“இடு காட்டில்!”
எல்லாமே சுழல ஆரம்பித்தன. நான் தரையில் உட்கார்ந்திருக்கக் கண்டேன். நான் பெரிதாகச் சிரித்தேன்.