Skip to main content

Posts

Showing posts from April, 2014

அழைப்பு

உன் திருமணச் செய்தியுடன் வந்த அன்று முத்தமிடப்பட மறுத்தாய் மென்மைத் தொலைத்த உன் இதயம் திகைப்புறச் செய்தது அதுவரை முத்தகங்களை மறுத்தறியாத உன் இதழ்களால் என்னைக் கைவிடும் வார்த்தைகளைக் கசியவிட்டாய் காய்களைப் பழங்களைக் காத்துக்கொள்ள முடியாத சாலையோர மாமரத்தின் கீழ் உதிரம் மொத்தம் பிழியபட்டவன் போல நின்றிருந்தேன் உன் திருமண ஊர்வலம் என் சவ ஊர்வலம் போலத் திகில் நிறைந்திருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது அன்று கொடி போலிருந்தவள் இன்றும் கொடி போல்தான் இருக்கிறாய் . . . . பூசணிக் காய்த்தக் கொடி அன்றைய வெட்கங்கள் இன்று வேட்கையாகி இருக்கிறது அன்று பார்த்தத் தேகம் கற் சிற்பம் இப்போது காண்பது சுதைச் சிற்பம் விரல்களை விடத் தடித்துவிட்டனக் காம்புகள் கைபிடிக்குள் அடங்கவில்லை எந்தபிடியும் தொலைபேசியில் அவர் ஊருக்குப் போயிருக்காரு என்ற கிசுகிசு அழைப்பில் கிளர்ந்தெழுகிறது தோற்ற வலியில் செத்துக் கிடந்த மொத்தக் காமமும்

மசால் வடை.

அவருக்கு மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை சாப்பிட்டுviduvaar. அன்று வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாறி மாறி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனை வந்தது. அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்தர் டீக்கடை கண்ணாடிக் கூண்டிலிருந்து ஒரு வடை எடுப்பதைப் பார்த்தார். தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றி கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த இன்னும் குண்டான ஆள், அடுத்த வடையை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் எண்ணத்தில் கடை உள்ளே நுழைந்தார். குண்டான, இவரைவிட கொழுத்த அந்த நபர் உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக் க

விரகம்

அக்னி வளர்கிறது சுடுகாட்டில் சில சமயம் பெருங்காட்டில் தேநீரில், உணவில் ருசிப்பது அக்னியைத்தான் உணவில்லாதவர் வயிற்றிலும் அக்னி காமக்னியின் சிதறிய துகள்கள் ஒவ்வொரு உயிரிலும். அதிலும் அவள் அக்னி எனக்குப் பிரியமானது தனிமையில் படுக்கச் செல்பவளின் அக்னியைப் கவனிக்கிறான் கடவுள் கவலையோடு.

வயலும் வாழ்வும்

துகிலில்லாத் தேகத்தை ஈர வயல்வெளியாய் கிடத்தியிருக்கிறாய் மென் ரோமங்களும், வியர்வையின் மினுமினுப்பும் தோலின் நுண்ணிய வரிகளும் சிலிர்த்தும் கிளர்ந்தும் கசிந்தும் விம்மியும் கிடக்கிறது பூவுலகின் சிற்றுரு (Miniature) காளையும் ஏரும் கலப்பையும் உழவனும் கடவுளும் நானே என்று கவிகிறேன் உன் தேகம் மீது அவதாரமாய்

ஏ' சிரிப்பு.

ஒரு பொண்ணு தன் காதலனுடன் வீட்டில் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவளோட கணவன் எதிர்பாராத விதமா திரும்பி வந்துட்டாரு. அது அபார்ட்மென்ட், ஒரே வாசல், அவன் தப்பிக்க வழியில்லை என்பதால், அவனை சிலைபோல அசையாமல் இரு என்று சொல்லிவிட்டு கதவை திறந்தாள் கணவன், யார் இவன் என்று கேட்டதும், இது ஒரு ரோபோட். நீங்க ஊரில் இல்லாத போது உடல்உறவுக்கு பயன்படுத்திக் கொள்ள வாங்கினேன் என்றாள். புருஷன் சந்தேகப்படலை. ஆனால், "சரி வா. இப்போ நாம உறவு கொள்ளலாம்" என்றான் அவள், "இல்லீங்க. இன்னிக்கு முடியாது. நான் பீரியடில் இருக்கேன். இருங்க உங்களுக்கு சூடா காபி கொண்டுவர்றேன்" என்று உள்ளே போய்ட்டாள் புருஷன் வீட்டுக்கு வந்ததே இதுக்குதான். அவ முடியாதுன்னதும், சரி, இந்த ரோபோ-வை முயற்சி பண்ணலாம் என்று பின்னாடிப் போனான். பாவம், காதலனுக்கு வேற வழியில்லை. சமயோசிதமா இயந்திரக் குரலில் "சிஸ்டம் எர்ரர், தவறான இடத்தில் முயற்சிக்காதீர்கள், சிஸ்டம் எர்ரர்" என்று திருப்பி திருப்பி சொன்னான். கணவனுக்கு கடுப்பு. "ரோபோ வேலை செய்யாமல் எழவெடுக்குது, ஜன்னல் வழியா தூக்கி எறியறேன் பாரு இதை" எ

பேய்கதை

சிவாவிடம் உன் கடந்தகாலத்தை வைத்து ஒரு கட்டுரை எழுது என்றார் அவர். கடந்தகாலம் என்றால், எவ்வளவு பழசுவரைப் போகலாம் என்று கேட்டான் . எவ்வளவு முடியுமோ அவ்வளவு பின்னால் என்றார். அப்போது என் பெயர் அகிலா என்று தொடங்கினான்.

தாகசாந்தி

கோடையின் துவக்கத்தில் குளக்கரை ஒற்றை ஈச்ச மரமெங்கும் மொய்க்கின்றன பச்சைக்கிளிகள். முந்தைய வருடமும் அவை இங்கிருந்தன தொலைந்து போயிருந்த அவைகளைத் தேடித் துழாவிய மரம் தன் தனிமை தாகத்தைத்  தணிக்கிறது கிளிகளின் கூச்சலை அருந்தியபடி

கிழவன்

மருத்துவனுக்காகக் காத்திருந்த முதுமையின் நாளொன்றில் மனித முகங்களை காணச் சகியாமல் கடிகாரம் கவனிக்கிறேன் தன் விஷ முற்களால் காலத்தை கொல்கிறது நொடிககளாக நிமிடங்களாக காலம் காலமாகிக்கொண்டிருக்கிறது வீடு திரும்புகையில் விஷ முற்கள் கொண்டக் கடிகாரமொன்று வாங்குவேன் காலத்தால் கொல்லப்படும் வரை காலம் கொல்லபடுவதைப் பார்த்திருப்பேன்

சீட்லெஸ்

வருடம் 2114.  ஜெஸிராவுக்கு வேலையும் தனிமையும் அலுப்பாக இருக்கிறது என்று கொஞ்ச நாள் முன்னாடித் திருமணம் செய்திருந்தாள். எல்லோரும் போல நிம்மதியாக, தத்ரூபன் 18+ சர்டிஃபைடு ரோபோ வாங்கியிருக்கலாம்.  உறவில் மென்மையாக கையாளும் லவ் மோட், நீண்ட நேரம் தாக்குபிடிக்கும் பேட்டரி, இடையில் ஹேங் ஆவதில்லை என்றெல்லாம் கேள்விபட்டிருக்கிறாள். ஆனால், இவள் சக குழுத்தலைவி மும்தா ரோபோவை வேண்டாம் என்றாள்.   மணவாழ்வில் ரோபோத்தனம் அலுத்துவிடும் என்று க்ளோனிங் மனிதன் ராபர்ட்-டை கடும் சிபாரிசு செய்திருந்ததாள்.  அவளிடமும் ராபர்ட் இருப்பதாக தெரிவித்தாள். அதனால், அதிகத் திருமணக் கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் பத்துவருட ஒப்பந்தத்தில் மணம் செய்து அழைத்து வந்திருந்தாள்.  ராபர்ட் பத்து வருடங்களுக்குக் குறைந்து ஒப்புக்கொள்ளவில்லை.  ஜெஸிராவின் ராபர்டை விட இவன் இரண்டு வயது இளையவன்.  இளமையாய் இருந்தான்.  இவளை வலிக்காமல் தூக்கினான்.  நல்ல தேர்வுதான் என்று ஜெஸிராவுக்கு தோன்றியது. திருமணத்தின் போது அவனும் வசிக்கும்படி 8 x 8 ரூம் மாறிக் கொண்டாள்.   வாடகை அதிகம்தான்.  பரவாயில்லை.   அவனுக்கு படுக்கைக்கு கீ

அசடு

குழந்தையைப் போலப் பூமியை  தூங்கப்பண்ணுகிறது இரவு  பூமி உறங்குவதை ஆசையாய்  எட்டிபார்க்கிறது சூரியன்  விழித்துக் கொள்கிறது குழந்தை

தேவதை மறுப்பாளர்கள்

'பெண் சிசு பிறந்திருக்கிறது' இந்த வரிக்கு துக்கம் சேர்த்தது யார் வாழ்த்துபவர்கள் சிரிப்பு சீக்கிரமே நின்று வேறு பேச்சு மாறுகிறதே ஏன் இனியாவது பொறுப்பாக இரு என்று குற்றவாளிக்குச் சொல்வது போல் ஏன் சொல்கிறார்கள் குழந்தையின் மென்சிரிப்பில் சந்தோஷச் செடிகளைப் பதியனிடும் கடவுளின் தோட்டமாகிறது என் வீடு இன்னொருமுறை தெய்வ நிந்தனைச் சொல்லாதீர்கள் இந்த சொர்க்கத்தில் நின்றுகொண்டு.