Skip to main content

Posts

Showing posts from July, 2014

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.

மனைவி

நிறங்களை விற்பவனிடம் சிறந்ததாக ஒரு நிறம் கேட்டேன் வெண்மையில் தொடங்கி வெளுத்த நிறங்களும் கருத்த நிறங்களும், பிறகு கருப்பில் முடியும் வண்ணங்களின் புத்தகம் காட்டினான் அதில் சிறப்பற்றதேதும் இல்லை தேடி, கற்பனையில் பூசி ரசித்து ஏற்றதென்று வாங்கிவந்த நிறம் வண்ணமயமாக்கியிருக்கிறது வீட்டை என்றாலும் நான் அடைய முடியாத வண்ணங்களின் வசீகரம் ஏக்கப் பூச்சாய் நிறைத்திருக்கிறது மனதை