Skip to main content

Posts

Showing posts from March, 2014

கடவுளின் கதை - சுயம்பு

(Caution: கடும் இலக்கியத் தரத்துடன் :) ) காலத்தின் முதல் புள்ளிக்கு முன் எதுவுமற்று இருந்தது. அண்டம் இல்லை.  காலம் இல்லை. அசைவு இல்லை. வெளிச்சம், இருள், சப்தம்,  நிசப்தம், வாசனை, சுவை, கடவுள், பேய் எதுவுமில்லை. யுகங்கள் என்று எதுவும் இல்லாதபோதே, கோடி கோடி யுகங்கள்  கடந்த சூன்யம், அதன் நிச்சலனம் தன் பிரக்ஞை உணர்ந்த  நொடியில் காலம் தோன்றியது.  காலம் தோன்றிய அந்த புள்ளியில் கடவுளும் தோன்றினார். பிரக்ஞையின் முதல் புள்ளிதான் கடவுள்.  கடவுளுக்கும் 'தான்' இருக்கிறோமா இல்லையா என்ற மயக்கம்.  'தான்' என்று தோன்றிய முதல் அணு, அல்லது அண்டத்தின் முதல் துகள் கடவுளே,  பூரணமடையாத கடவுள். கடவுளுக்கு முதலில் தோன்றிய எண்ணம், தான் தனியாயிருக்கிறோம் என்பதே.  தன்னை சூழ்ந்த நிச்சலனமும், சூன்யமும் கடவுளுக்கு துக்கமாயிருந்தது.  அந்த துக்கம் நீண்டகாலம் தொடர்ந்து இருந்தது.  கடவுள்  தனிமையில் செயலற்று இருத்தல் காலத்தை உறைய வைத்தது. தன் தனிமையை பொறுக்காத கடவுள், தனக்குத்தானே கவனிக்கத் துவங்கினார்.  அவருக்கு புலன்கள் தோன்றின, உணர்வுகள் தோன்றின, மொழி தோன்றியது.  அதன் மூலம் எதுவுமற்ற கடவுள்,

கூடடைதல்

கவனித்துக் கொண்டிருக்கும்போதே நிழல்கள் கரைந்து இருளோடு கலந்துவிடும் கந்தாலா மலைகிராமத்தில் அந்திச் சூரியன் சுறுசுறுப்பானது விரைந்து மறையக் கூடியது மலைச்சரிவு வனாந்திரத்தில் அசட்டையுடன் தனியனாக உங்கள் நிழலை தொலைத்தவுடன் நீங்கள் பயம் கொள்கிறீர்கள் ஓடை சலசலப்பு முகத்தில் மோதும் பூச்சிகள் பறவைகள் எழுப்பும் சப்தங்கள் காலில் மிதிபடும் வினோத மிருதுத்தன்மை யாவும் பகலிலும் இருந்தவைதான் என்பதை ஞாபகபடுத்த எவருமற்ற தனிமையில் உங்கள் பயங்கள் பெருகுகிறது. உங்கள் உறங்குமிடம் செல்லும் பாதை இரட்டிப்பாக நீண்டுவிட்டது கிறுக்குத்தனமான தைரியம் கிறுக்குத்தனமான பயம் உங்களுக்கு உதவி கிடைக்கிறது பழகியறியாத, நாகரீகமற்ற எதிர்படும் மலைவாசியை உங்களுக்கு பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது உங்கள் இடத்துக்கு அவன் கைகாட்டும் திசையை நம்புகிறீர்கள் இன்னும் சிறிது தூரம், கூடடைந்த பிறகு பாதுகாப்பில் இருளும், உலகமும் உங்களுக்கு மீண்டும் ரம்யமாகிவிடும் நீங்கள் மிதித்துகொண்டிருக்கும் மென் புற்கள் வேதனையுறுகின்றன.  அதில் உறங்கிகொண்டிருந்த புழு இறந்துவிட்டது நகர்ந்து கொள்ளுங்கள் ப

வாழும் நாகம்

அக்ரகார தெருன்னு பெயரே தவிர, ரெண்டு வீட்டுலதான் அய்யிருங்க இருந்தாங்க. அதுலயும் ஒரு வீட்டுல இருந்த ரங்கு பாட்டி செத்தப்புறம் கொள்ளிபோட்டுப் போனவங்கதான். பெரிய வீடு பாழாகி ராஜநாகம் குடியிருக்கு. அந்த நாகம் பூமிக்கு கீழே பொந்து வழியா வீடு விட்டு வீடு போகும், வரும். சூட்டுக்காக அடுப்படிக் கீழே படுத்துக் கிடக்கும். அதுக்கு வயசு அதிகம். வீட்டு மனுசாளை ஒன்னும் பண்ணாது. பாழான வீட்டுல எலிபிடிக்க அலையும். படையபுரம் அய்யிருங்க, நிலத்தை விட்டுப் பொழைப்பு தேடி கிளம்புறது நாலைஞ்சு வருசமாவே அதிகமாயிடுச்சி. கணக்குபிள்ளை உத்தியோகம் பார்த்துக்கிட்டுருந்த கிட்டு அய்யிரு, உங்ககிட்டப் பேரச் சொல்லிட்டனே தவிர அவருப் பேரை அந்தத் தெருவுல வாய்விட்டு சொல்ல முடியுமா, வேலை போயி, வீட்டுத் திண்ணையில முடங்கின பின்னாடியும் கூட அதிகாரம் ஆகாசத்தைப் பிளக்கும். அவரோட வூட்டுல பைத்தியம். கட்டும்போது நல்லாத்தான் இருந்திச்சு. இவரு மைனரு ஆட்டம் போட்டு, ஊர் பொம்பிளைகளைத் தகராறு பண்ணிக்கப் போயி, அதுக்கு நிம்மதி போச்சு. ஆரம்பத்துல நடிக்கத்தான் செஞ்சுச்சாம். பின்னாடி நிசமாவே கிறுக்குபிடிச்சி போச்சு. அவரு வீட்டுல அம்சமா ஒரு

நினைவுப்பாதை, நகுலன்

நாம் முக்கியம் என்று நினைப்பதெல்லாம் அப்படி முக்கியமில்லை என்று நினைக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்று நமது பிரச்சனைகளெல்லாம் பைசலாகிவிடும். ஆனால் இப்படியெல்லாம் சொல்வதெளிது. செய்வதரிது. அவர் அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார். உனக்கு வேண்டிய ஆனால் அவசியமில்லாத ஒன்று கைமறதியாக வைத்துவிட்டதால் கிடைக்கவில்லை. அது அப்படியே தொலைந்துப் போனாலும் பெரிய நஷ்டமுமில்லை. விவேகப் பூர்வமாக இனிமேல் சற்று ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதும், இந்த விஷயத்தை மறந்துவிடவேண்டும் என்பதும்தான் ஞானம். ஆனால் முக்கால்வாசிப் பேர்களும் இப்படியெல்லாம் மனம் உழல்வதால் தாங்களும் உழல்வார்கள். மனோதத்துவம் படித்துபடித்து நமக்குப் பிரச்சனைகள்தான் பிரச்சனைகளின் பரிகாரத்தைவிட முக்கியமாகப்படுகிறது என்பார். ~ நினைவுப்பாதை, நகுலன்

காமமும்... ரயிலும்....

காமமும் ரயிலும்... இல்லம் நீங்கும் நீண்ட பயணத்தில் மோகவிதை வளரும் காலம் தண்ணீர் ஏக்கம் உரம் அவள் நினைவு வரப்புயர மோகம் உயரும் பசியல்ல... பழகிய ருசிகூட பந்திக்கு அழைக்கிறது. * அன்று முதலிரவில் ஆரம்பத் தயக்கங்களை பரஸ்பரம் வென்றோம் திறப்புவிழா தொடங்கியது திறக்கவென்றே மூடப்பட்ட திரைகள் விலக முதலில் தரிசித்த கருப்பு முத்துக்கள் இப்போதும் என் கருவிழியில் தேங்கிக் கிடக்கின்றன * அவள் கருப்பு நான் கருப்பு வேறு வேறு கருப்பு அவள் கருப்பிலும் கொங்கைகள் தனிக்கருப்பு கருப்பின் நூறுவகை உள்வண்ணங்களை எண்ணத் தொடங்கினேன் தடுத்த விரல்களை முத்தமிட்டு அடக்கினேன் கண்ணாடித்தொட்டி மீன்கள் கள்வனிடமிருந்து வீட்டைக் காக்க முடியுமா? * மெத்தென்ற இதம் இதத்துடன் தொடுதல் மோகம் நெற்றியும் கண்களும் காதுகளும் கன்னக் கதுப்புகளும் அவள் எனக்கு ஒதுக்கித் தந்த முத்தப் பிரதேசங்கள் அவற்றை நான் ஒதுக்கி விடுவேன் அதரங்கள்தான் எனக்கு ஈர்ப்பு அவளின் நான்கு அதரங்களும் சுவைக்கப் பிரியமானவை குவளை குவளையாய் அருந்தினேன் அவளை அவள் குவளையில் அவளை… * சிகரங்களில் தேனெடுக்கும் தேனீ சுனைகளில் வாய்வைத்து அருந்தும்

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்

களவு காமம் காதல் - வாசிப்பனுபவம் கதை நேரடியானது. எந்த குழப்பமும் இல்லாமல் முக்கியமாக நான் பயப்படும் குறியீடுகள் இல்லாமல் செல்கிறது.  இதன் முதல் அத்தியாயத்தை ஏற்கனவே சாரு வாசகர் வட்டத்தில் படித்த ஞாபகம். நாவலை எடுத்ததும் அதுகுறித்து நான் ஏற்கனவே படித்தது, பேசியது, கேட்டது என்று அனைத்தையும் ஒதுக்கிவிட்டு படிக்கத் தொடங்கினேன். குறிப்பாக, புத்தக வெளியீடு அன்று திரு.கரன் கார்கி மற்றும் திரு.(?) அராத்து இருவரும் பேசியது மனதில் சுற்றிகொண்டே இருந்தது. அவற்றை ஏற்று கொண்டுவிட்டால் படிப்பதில் அர்த்தம் இல்லை என்று அவர்கள் சொன்ன கருத்துகளை மறுதலித்துகொண்டே படித்தேன். மற்றொன்று, சாம் நாதனின் பேஸ்புக் நிலைதகவல்கள் பாணியில் எழுதப்பட்ட, மனதின் இடையறாத எண்ணங்கள். கதைக்கு தேவையோ இல்லையோ, வாழ்வில் மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் இல்லையா, அதுவும் அதிகம் பேசாதவர்கள் மனம் இடும் கூக்குரல்கள் அப்படியே கதைக்கு பொருந்தும் எண்ணங்களை பதிவு செய்திருக்கிறார். எந்த மூத்த எழுத்தாளரின் பாணி, அல்லது அவர் போல எழுதியிருக்கிறார் என்று சொல்ல முடியாது. ரகுவர்த்தன் எழுதிய Quotes மொத்தமும் பொருந்தாம

ஏய் விடுடி...

என் படுக்கையில் நீ நதிபோல மாறுகிறாய் கூந்தல் நதியாழத்தின் இருட்டாக வழிகிறது. உன் சுழல்களில் சிக்கிச் சாவேன் என்று வீழ்கிறேன் சிறிதுநேரம் நினைவுத் தப்பித் திரும்புகையில் நான் வீழ்ந்த இடம் வேறு, இப்போது கரையேறும் இடம் வேறு விளையாட்டுக்கு சிறிது அமிழ்த்திப் புரட்டி பிறகு மேலெறிகிறாய் நீந்தியது போதுமெனக் கரையேற முயன்றால் முத்தமிடத் தொடங்குகிறாய் எனக்கு கால்கள் வழுக்குகிறது களைப்பாகிறேன் சகியே நதிக்கரைகளில் நாகரீகம் பிறந்தது என்று சொன்னவனுக்கு சொல்வேன் ஒரு நதிதான் என் நாகரீகத்தை அழித்தது என்று

கைவிடுதல்

முந்தாநாளே சொல்லியிருந்தார் ஜோசியர் உயிர் ஒடுங்கிகொண்டிருப்பதாய் இன்று தந்தையைக் கைவிடும் வார்த்தைகளைச் சொல்லத்தொடங்குகிறார் மருத்துவர் பலூனை நிறுத்தினால் பிணம் என்பதை வேறுவேறு வாய்கள் வேறுவேறு விதமாகச் சொல்லிவிட்டன இப்போது விளக்கைக் குளிர்விப்பதைப் போல அவர் உயிரை நிறுத்தவேண்டும் குழாய்ச் சொருகபட்டிருந்த வாயிலிருந்து வினோத சப்தங்கள் எழுப்பி நடுங்கும் கரத்தால் என் கையை இறுகப்பிடித்திருந்தவர் என்னை நம்பினாரோ உயிர்காப்பேன் என்று நீங்களும் எவ்ளோதான் செலவு செய்வீர்கள் பயனும் இல்லாமல் - மந்திரம் போலச் சொல்லபடுகிறது பணத்தைக் கொட்டினால் உயிரை மீட்டுவிடும் நவீன சாவித்திரி மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள் சத்யவான்கள் மருத்துவமனையின் சிறிய கோயிலில் பொறுப்பற்றுப் படையல் ஏற்கிறார் பிள்ளையார்

திகம்பரன் என்ற கட்டுரையில், சாரு நிவேதிதா

பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கி விட்டது இந்தச் சூழலின் அவலங்களில் ஒன்று. அவர் முன்வைத்த ஆயிரத்தோரு விஷயங்களில் ஆயிரம் விஷயங்களை விட்டுவிட்டு , கடவுள் மறுப்பு என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பதோ கொண்டாடுவதோ வெறும் மதியீனமேயாகும். பெரியாரின் கடவுள் மறுப்புக் கட்டுரைகளையும் , பேச்சுக்களையும் வாசித்துப் பார்க்கும் போது அவர் க டவுளை எதிர்த்ததன் காரணம் , கடவுள் கோட்பாட்டின் காரணமாக ஏற்பட்ட ஜாதீய வேறுபாடுகள்தான். அரசனுக்கு ஆலோசனை வழங்க ஒரு ஜாதியும் , மனித மலத்தைச் சுமப்பதற்கு மற்றொரு ஜாதியும் என்ற அவலம் கடவுள் என்ற கோட்பாட்டை முன்வைத்து நடந்ததாலேயே அவர் கடவுளை எதிர்த்தார். மற்றபடி பெரியார் சாதி, இனம், மொழி, தேசம், கலாச்சாரம் போன்ற எல்லா அடையாளங்களையும் தாண்டியவர். அதனால்தான் அவர் முப்பதுகளில் ஐரோப்பா சென்ற போது பெர்லினுக்குப் பக்கத்திலுள்ள ஒரு ஊரில் இருந்த நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி அவர்களோடு நிர்வாணமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை அவரது ஐரோப்பியப் பயணம் பற்றிய நூலில் நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் துறவிகளைத்

பேஸ்புக்

எனக்குப் பிடித்தக் கடவுளும், உனக்குப் பிடித்தக் கடவுளும் வேறு வேறு. பரவாயில்லை விட்டுத் தள்ளு. உனக்கும் எனக்குமான சாத்தான் ஒன்றே. அதைப் புரிந்துகொள்வோம் வா.

பேஸ்புக்

ஒரு கவிஞன் அந்தக் குடிசைப் பகுதியைக் கடக்கும் போது அங்கிருந்தவனைக் கண்டு யோசித்தான். "இந்த எழுத தெரியாத மனிதன் தனக்குள் தோன்றும் கவிதைத் தருணங்களை என்ன செய்வான்? பாவம்" என்று.  அடுத்தத் திருப்பத்தில் கவிஞனின் எதிரில் வந்த ஓவியன் புன்னகைத்தான்.

பேஸ்புக்

இரண்டு குழந்தைகளையும் பிடித்தபடி, அவர்களின் ஸ்கூல் பைகளையும் எடுத்துவரும் பெண் தன் மேலாடையை கவனிக்க முடியாதபோது, தலை குனிந்து நடக்கிறவன் அதிக கம்பீரமானவன்.

பேஸ்புக்

வீட்டில் டைனிங்டேபிள் எல்லாவற்றுக்கும் உபயோகமாக இருக்கிறது. சாப்பிட மட்டும்தான் உபயோகம் இல்லை.

யாழினி

கூடலுக்குப் பின் கொஞ்சநேரம் பேசவேண்டும் உனக்கு விலக்க முனைகையில், இரு, ஒருவருக்குள் ஒருவரை கடத்திகொண்டிருக்கிறேன் என்றாய். அதான் ஆயிற்றே என்றேன் பிறிதொரு நாளில் எனக்கு அப்பாவாக அம்மாவாக மகனாக மகளாக பிறந்து வாயேன் என்றாய். வீட்டின் திரைச்சீலையை கடந்து வருவதைப் போல எளிதா என்றேன் பூங்கா புல்வெளியில் உரையாடிக் கொண்டிருக்கையில், என்னைவிட்டு மரணித்து விடாதே என்றாய் வழமையான தொனியில் பதில் சொல்லத் தொடங்குகையில் என் வாயைப் பொத்தினாய் யாழினி... இனிய.. யாழினி. கூடத்தில் உன்னை மாலையிட்டுக் கிடத்தியிருந்த நாளில் நீ எனக்குச் சொன்ன எதையும் நான் உனக்கு சொல்லாமல் விட்டேனே என்ற துக்கத்தில் அழுதேன்.

பேஸ்புக்

குடிபழக்கம் உள்ளவர்கள் சிலருக்கு குடித்ததும் உளரும் பழக்கமும் இருக்கிறது. குடிக்காதவர்களுக்கு பிரச்சனையில்லை. அவர்கள் எப்போதுமே உளறமுடியும்.

அந்த தருணம்

என் அந்தரங்கத்தைக் கவிதையாக எழுதுகையில் அறைவாசலில் நிழலாடியதென்றப் பதட்டத்தில் அழித்துவிட்டேன் இந்த உறங்கமுடியாத இரவில் மீண்டும் எழுதிப்பார்கிறேன் கவிதையோடு அழிந்தத் தருணம் திரும்பிவர மறுக்கிறது.

என் சொல்

பக்தனாவது எப்படி என்று கடவுளைக் கேட்டேன். கடவுளாவது எப்படி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரைவிட கொ

பேஸ்புக்

காரில் புதியதொரு இசையை கேட்டுக் கொண்டே போகிறோம். வண்ணத்துபூச்சி மலரில் தேனெடுப்பது போல, சிறகசைப்பது போல, மெல்ல படபடப்பது போல, பறப்பது போல....இசை இழைகிறது.  அப்போது கார் கண்ணாடியில் ஒரு பட்டாம்பூச்சி மோதி அந்த நொடியிலேயே கூழாகி விட்டது. வைப்பரில் தண்ணீர் பீச்சி, ஓட்டுனர் துடைக்கிறார். இசை தொடர்கிறது.

பேஸ்புக்

கொலுசு அணிந்ததும்  கால்கள்  பேசத்தொடங்குகின்றன. --- கவிதை இனிது, பாடல் இனிது, இசை இனிது என்பார் ஒழுங்காய் முத்தமிடத் தெரியாதவர் --- எல்லா திசைகளும் நான் நின்றிருந்த இடத்தில் சந்தித்துக் கொண்டன. --- இறைவன் அமைவதெல்லாம் மனைவி கொடுத்த வரம். # மதம் மாறி கல்யாணம்.

பேஸ்புக்

நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் தொடங்கியவற்றின் மீது அலுப்பு/சலிப்பு வருகிறது என்றால், அதைத் தவறாக செய்கிறீர்கள் என்று அர்த்தம்

பேய்க் கதை - நண்பன்

ஒருத்திக்குத் தன்னுடைய கணவன் மீது மிகுந்த காதல் என்றாலும், அவனுடைய நண்பன் ஒருவன் மீது எரிச்சல். எதை பேசினாலும் உங்கள் நண்பரிடம் இதையெல்லாம் சொல்லாதீர்கள் என்பாள். இவனும் தலையாட்டிவிட்டு ஆனால் தன் நண்பனிடம் சொல்லிவிடுவான். தான் சொல்லியும் கணவன் நண்பனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறானே என்று கோபம் அவளுக்கு.   அன்று கணவனுக்கு தோசை வார்த்துப் போட்டுக்கொண்டே அவளின் தம்பியைப் பற்றி பேசிக ் கொண்டிருந்தாள். பின்னர் வழக்கம் போல, "இதையாவது உங்கள் நண்பரிடம் போய் சொல்லாதீர்கள்" என்று சொன்னாள். அந்த நேரம் சரியாக நண்பன் போனில் அழைத்தான். இவனும் பேச்சு வாக்கில் தன் மச்சினன் விஷயத்தை சொல்லிவிட்டான். மனைவி வெறியாகி, தோசைக்கரண்டியுடன் கணவன் மீது பாய, கணவன் நகர்ந்து தப்பித்துக் கொண்டான். அப்போது அவன் பேசிகொண்டிருந்த போன் கீழே விழுந்துவிட்டது. மனைவி கடுப்பில் போனை தோசைக்கரண்டியால் நாலு சாத்து சாத்தி உடைத்துவிட்டாள். மறுநாள் அவளுடைய கணவன் தன் நண்பனை சந்திக்கப் போனான். அவன் முகத்தில் பலத்த அடிபட்டு, கட்டும் போட்டிருந்தான். என்னடா ஆச்சு என்று விசாரித்தால், "என் வீட்டில் தோசைக்கரண்டி கீழே கி

கண்டதும்.. காணாததும்

கோலமிட்டுத் திரும்பியவளை மறித்து உன் கன்னங்கள்தான் செழுமையானவை என்றே தவறாக எண்ணியிருந்தேன் கணுக்கால்களை காணும் வரை என்றால் வெட்கமேறியக் கன்னங்கள் பூரிக்க இதுவும் தவறான எண்ணம்தான் என்றாள்

பேய் கதை - மூஞ்சுறு

சாந்தி படிக்கும் அதே வகுப்பில்தான் பூந்தியும் படிக்கிறான். அவர்கள் பள்ளிக்கூடம் ஊருக்கு வெளியில் களத்துமேடுப் போகும் வழியில் இருக்கிறது. பஞ்சாயத்துக் கட்டிகொடுத்த பாடாவதிக் கட்டிடம்.  வகுப்பில் பையன்கள் ஒன்பது பேர்தான். பெண்கள் பதினைந்துப் பேர் என்பதால் பூந்திக்குப் பயம். பயம் போவதற்காகச் சாந்தி அந்தப் பயல்களை ஆளுக்கொரு மூஞ்சுறு வளர்க்க யோசனைச் சொன்னாள். அன்றிலிருந்து பயல்கள ் ஆளுக்கொரு மூஞ்சுறு வளர்த்தார்கள். சாந்தியின் தோழி நாமும் வளர்க்கலாமா என்று கேட்டதற்கு, அவனுங்க வளர்க்கிறது போதும் என்று நக்கலாகச் சொல்லிவிட்டாள். தோழி வற்புறுத்தியபோது “உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன் கேள். நான் இந்திரலோகத்து அப்சரஸ். இந்திரனுக்கு பிரியமான நர்த்தகி. என்னைச் சுவர்க்கம் செல்லும் பாதையில், நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையில் தங்கவைதிருந்தான். ஒருநாள் நான் நீச்சல் உடையில் நின்றபடி சுவர்க்கம் செல்லும் ஆண்களைக் கிண்டல் செய்துகொண்டிருந்தேன். அப்போது அந்தவழியாக வந்த முனிவர் அதைப் பார்த்துவிட்டார். என்னைப் பூலோகத்தில் பிறந்து ‘ஈவ் டீசிங்’ கொடுமையை அனுபவி என்று சபித்து இங்கே அனுப்பிவிட்டார். எனக்கு இந்திர

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.

பேய் கதை - ரிபீட்

ராமுவின் அக்கா கோமு புதிதாக ஸ்கூட்டர் வாங்கியிருந்தாள். ஸ்கூலுக்கு சைக்கிளில் போய் போரடித்திருந்த ராமு, ஆசையாக அந்த ஸ்கூட்டரை வாங்கி ஒட்டிக் கொண்டுப் போனான். குறுகிய ரோட்டில் ஓரமாக ட்ரான்ஸ்பார்மர் இருந்தது. அதில் நீட்டிக் கொண்டிருந்த இரும்பு பைப் மண்டையில் இடிக்கும் முப்பது நொடிகள் முன்பு, வண்டி ஐம்பது கிலோமீட்டர் வேகம் காட்டியதைப் திரில்லாக பார்த்துக் கொண்டிருந்தான். தினமும் சரியாக அதே நேரத்தில், அதே வேகத்தில் அந்த பைப்பில் புன்னகையுடன் போய் மோதிக் கொள்கிறான்.