Skip to main content

Posts

பிறழ்வு - கதை 3

கட்டிடம் நான்காவது மாடியாக வளர்ந்து கொண்டிருந்தது. எலும்புக் கூடு நிற்பதைப் போல மொத்தமாக சிமென்ட் தூண்களும் தளங்களும் மட்டும் முடிந்திருந்தன. அடிப்படை கட்டுமான வேலைகளை முடித்துவிட்டுதான் சுவர் கட்டத்தொடங்குவது என்பது முடிவு. செங்கற்கள் கிடைப்பதும் சிரமமாக இருந்தது. மொத்தப் பணத்தையும் கட்டிவிட்டு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்தளவு இல்லாவிட்டலும், அடுத்த மாதங்களில் இன்னும் விலையும் தட்டுப்பாடும் குறையலாம் என்பதால் இன்னும் சுவர்வேலைகளை தொடங்கவில்லை தண்ணீர்விட்டுத் தேக்கியிருந்த தளத்தில் நிற்பது நன்றாக இருந்தது. அந்தி சூரியன் நகரின் பின்புலத்தில் தன் வர்ணஜாலங்களை தொடங்கியிருந்தான். மனப்பாடமாக இருந்த ஆதித்யஹிருதய பாடல்களை, ஒன்றிரண்டுதான் தெரியும். சொல்லத் தொடங்கினேன். எதிரிகளை சமாளிக்க இந்த ஸ்லோகங்கள் உதவும் என்று மோகன் கேட்டுக் கொண்டே இருப்பான். கட்டிட பொருட்கள் வாங்க சீனா போயிருக்கிறான். எனக்கு எதிரிகள் யாரும் இல்லை, ஆனாலும் ஸ்லோகத்தில் இருந்த வசீகரத்திற்காக சொல்வேன். வேலையாட்கள் தரைதளத்தில் மோட்டாரை இயக்கிவிட்டு உடல் கழுவிக் கொண்டிருந்தார்கள். சூர்யதாசுக்கு நாளைய வேலைகளை ஒப்படைக
Recent posts

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம். சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த ப

பிறழ்வு - கதை 1

மென்மையான குரலில் "நீங்கள் ஏன் இறந்து போய்விட கூடாது" என்று கேட்டேன். அதன் அர்த்தம் அவருக்கு உடனே புரிந்தாலும் சற்று தாமதமாக பதில் சொன்னார். "என்ன பிரச்சனை வந்தாலும் ஒருவன் இறந்துவிட வேண்டியதில்லை என்பதுதானே நீ எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் செய்தி. ஏன் என்னிடம் மட்டும் இப்படி கேட்கிறாய்" என்றார். "பிறர் வேறு. அவர்களை நான் நல்வழிப்படுத்த வேண்டியுள்ளது. அவர்கள் கொஞ்சம் பிரயோசனமான வாழ்கையை வாழ்கிறார்கள். உங்களைப் போல அல்ல. நீங்கள் மிகவும் பழைய மனிதர். நீங்கள் செய்வது எதுவும் சரியாக செல்லவில்லை. இத்தனை தோல்வியுடன் நீங்கள் வாழ்வது சரியல்ல." கண்ணாடியில் பிரதிபலித்த கண்களின் ஈரம் கண்ணீராகவும் இருக்கலாம். நான் சொல்ல வேண்டியதின் மிக முக்கியமான செய்தியை சொன்னேன். "மேலும், உங்களை சகித்துக் கொள்வது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. உங்களால் நான் அடையும் மன உளைச்சல் மிக அதிகம். உங்கள் மூலம் நரகம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த அறைக்கு வந்து சேருகிறது." அவரிடம் நான் சில சிறு விஷகுப்பிகள், வசீகரமான கண்ணாடியில் பிரதிபலிப்பு உள்ள திரவமுடையவை, அந்த அறையில் இருப
ஒருத்தியை எல்லை கடந்து நெருங்கிவிடும் தருணத்தில் அவள் வசிகரம் அளவு கடந்து ஈர்க்கிறது - அவள் பேரழகியாகி விடுகிறாள் புதை மணலுக்குள் சிக்கி மூர்ச்சையானவனைப் போல உயிரும் மனமும் ஸ்பரிசத்துடன் ஒன்றி புற உலகை துண்டித்துக் கொள்கிறது உயிர் பிழைத்தலின் இச்சைக்கு நிகரான வெறியூறுகிறது வேஷங்கள் நீர்த்து நிர்வாணம் விரிந்து நதியாகி அவர்களைப் பரிசுத்தமாக்கும் போது கொலைப் பட்டினிகாரர்கள் உணவை புசிப்பது போல நகரீகத்தை மறந்துவிடுகிறார்கள் தம்மை சொர்க்கதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் போது மீண்டும் விதைக்கப்படுகிறது மற்றொரு ஆசை விருட்ச்சத்தின் விதை

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.