ஒருத்தியை எல்லை கடந்து
நெருங்கிவிடும் தருணத்தில்
அவள் வசிகரம்
அளவு கடந்து ஈர்க்கிறது - அவள்
பேரழகியாகி விடுகிறாள்
புதை மணலுக்குள் சிக்கி
மூர்ச்சையானவனைப் போல
உயிரும் மனமும்
ஸ்பரிசத்துடன் ஒன்றி
புற உலகை
துண்டித்துக் கொள்கிறது
உயிர் பிழைத்தலின் இச்சைக்கு நிகரான
வெறியூறுகிறது
வேஷங்கள் நீர்த்து
நிர்வாணம் விரிந்து நதியாகி
அவர்களைப் பரிசுத்தமாக்கும் போது
கொலைப் பட்டினிகாரர்கள்
உணவை புசிப்பது போல
நகரீகத்தை மறந்துவிடுகிறார்கள்
தம்மை சொர்க்கதிலிருந்து
விடுவித்துக் கொள்ளும் போது
மீண்டும் விதைக்கப்படுகிறது
மற்றொரு ஆசை விருட்ச்சத்தின் விதை

Comments

Popular posts from this blog

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

பிறழ்வு - கதை 3

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்