நிறங்களை விற்பவனிடம்
சிறந்ததாக ஒரு நிறம் கேட்டேன்
வெண்மையில் தொடங்கி
வெளுத்த நிறங்களும்
கருத்த நிறங்களும், பிறகு
கருப்பில் முடியும்
வண்ணங்களின் புத்தகம்
காட்டினான்
அதில் சிறப்பற்றதேதும் இல்லை
தேடி, கற்பனையில் பூசி ரசித்து
ஏற்றதென்று வாங்கிவந்த நிறம்
வண்ணமயமாக்கியிருக்கிறது வீட்டை
என்றாலும் நான் அடைய முடியாத
வண்ணங்களின் வசீகரம்
ஏக்கப் பூச்சாய் நிறைத்திருக்கிறது மனதை
சிறந்ததாக ஒரு நிறம் கேட்டேன்
வெண்மையில் தொடங்கி
வெளுத்த நிறங்களும்
கருத்த நிறங்களும், பிறகு
கருப்பில் முடியும்
வண்ணங்களின் புத்தகம்
காட்டினான்
அதில் சிறப்பற்றதேதும் இல்லை
தேடி, கற்பனையில் பூசி ரசித்து
ஏற்றதென்று வாங்கிவந்த நிறம்
வண்ணமயமாக்கியிருக்கிறது வீட்டை
என்றாலும் நான் அடைய முடியாத
வண்ணங்களின் வசீகரம்
ஏக்கப் பூச்சாய் நிறைத்திருக்கிறது மனதை
Comments
Post a Comment