மருத்துவனுக்காகக் காத்திருந்த
முதுமையின் நாளொன்றில்
மனித முகங்களை காணச் சகியாமல்
கடிகாரம் கவனிக்கிறேன்
தன் விஷ முற்களால்
காலத்தை கொல்கிறது
நொடிககளாக
நிமிடங்களாக
காலம் காலமாகிக்கொண்டிருக்கிறது
வீடு திரும்புகையில்
விஷ முற்கள் கொண்டக்
கடிகாரமொன்று வாங்குவேன்
காலத்தால் கொல்லப்படும் வரை
காலம் கொல்லபடுவதைப்
பார்த்திருப்பேன்
முதுமையின் நாளொன்றில்
மனித முகங்களை காணச் சகியாமல்
கடிகாரம் கவனிக்கிறேன்
தன் விஷ முற்களால்
காலத்தை கொல்கிறது
நொடிககளாக
நிமிடங்களாக
காலம் காலமாகிக்கொண்டிருக்கிறது
வீடு திரும்புகையில்
விஷ முற்கள் கொண்டக்
கடிகாரமொன்று வாங்குவேன்
காலத்தால் கொல்லப்படும் வரை
காலம் கொல்லபடுவதைப்
பார்த்திருப்பேன்