Skip to main content

விரகம்

அக்னி வளர்கிறது சுடுகாட்டில்
சில சமயம் பெருங்காட்டில்

தேநீரில், உணவில் ருசிப்பது
அக்னியைத்தான்

உணவில்லாதவர்
வயிற்றிலும் அக்னி

காமக்னியின் சிதறிய துகள்கள்
ஒவ்வொரு உயிரிலும்.
அதிலும் அவள் அக்னி
எனக்குப் பிரியமானது

தனிமையில் படுக்கச் செல்பவளின்
அக்னியைப் கவனிக்கிறான் கடவுள்
கவலையோடு.

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம். சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த ப