Skip to main content

ஏ' சிரிப்பு.

ஒரு பொண்ணு தன் காதலனுடன் வீட்டில் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவளோட கணவன் எதிர்பாராத விதமா திரும்பி வந்துட்டாரு. அது அபார்ட்மென்ட், ஒரே வாசல், அவன் தப்பிக்க வழியில்லை என்பதால், அவனை சிலைபோல அசையாமல் இரு என்று சொல்லிவிட்டு கதவை திறந்தாள்

கணவன், யார் இவன் என்று கேட்டதும், இது ஒரு ரோபோட். நீங்க ஊரில் இல்லாத போது உடல்உறவுக்கு பயன்படுத்திக் கொள்ள வாங்கினேன் என்றாள். புருஷன் சந்தேகப்படலை. ஆனால், "சரி வா. இப்போ நாம உறவு கொள்ளலாம்" என்றான்

அவள், "இல்லீங்க. இன்னிக்கு முடியாது. நான் பீரியடில் இருக்கேன். இருங்க உங்களுக்கு சூடா காபி கொண்டுவர்றேன்" என்று உள்ளே போய்ட்டாள்

புருஷன் வீட்டுக்கு வந்ததே இதுக்குதான். அவ முடியாதுன்னதும், சரி, இந்த ரோபோ-வை முயற்சி பண்ணலாம் என்று பின்னாடிப் போனான். பாவம், காதலனுக்கு வேற வழியில்லை. சமயோசிதமா இயந்திரக் குரலில் "சிஸ்டம் எர்ரர், தவறான இடத்தில் முயற்சிக்காதீர்கள், சிஸ்டம் எர்ரர்" என்று திருப்பி திருப்பி சொன்னான்.

கணவனுக்கு கடுப்பு. "ரோபோ வேலை செய்யாமல் எழவெடுக்குது, ஜன்னல் வழியா தூக்கி எறியறேன் பாரு இதை" என்றான்.

அந்த வீடு பதினெட்டாவது மாடியில் இருக்கு. காதலனுக்கு திக்கென்று ஆயிடுசிச்சி. அவன் நிலைமையை சமாளிக்க சொல்லத் தொடங்கினான்

"சிஸ்டம் அப்டேட்டட். ப்ளீஸ் ட்ரை அகைன்"

Courtesy: santabanta.com

Popular posts from this blog

மூன்று வடையும் ஒரு சமாதானமும்

அவருக்கு டீக்கடை மசால்வடை என்றால் இஷ்டம். டாக்டர் சாப்பிடக்கூடாது என்று சொல்லியும் அவ்வப்போது ஒன்றிரண்டு வடைகளை தெரிந்தவர்களுக்குத் தெரியாமல் சாப்பிட்டுவிடுவார். அன்றும் ஒரு கையில் வடையும், மறுகையில் டீயும் வைத்து, மாற்றி மாற்றி சுவைத்துக் கொண்டிருந்தார். வடை தீர்ந்தது. இன்னொன்று சாப்பிடலாமா என்று ஆசை. ஆனால், டாக்டர் சொன்னது யோசனைக்கு வந்தது.  அப்போது இவரைவிட பெரிய உடம்புடன் ஒருத்த ர் கண்ணாடிக் கூண்டிலிருந்து வடை எடுப்பதைப் பார்த்தார்.  தன்னைவிட கொழுத்த ஒருவர் கொழுப்பைப்பற்றிக் கவலைபடாதபோது தனக்கு என்னக் கேடு என்று சமாதானம் சொன்னபடி இன்னொன்றும் எடுத்துக் கொண்டார். அதுவும் தீரும் சமயத்தில் அந்த 'இவரைவிட' குண்டான நபர், இன்னொரு வடை எடுப்பதைக் கண்டார். அதனால் உந்தப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாவது வடையையும் காலி செய்தார். வயிறு நிரம்பிவிட்டது. அப்போது போட்டிக் குண்டர் அடுத்த வடையும் எடுக்கையில் நம்ம ஆள் கடுப்பாகிவிட்டார். என்னதான் ருசிக்கு அடிமை என்றாலும், இப்படியா தின்பது என்று இவருக்கே கோபம். அந்த ஆளை சரியாக பார்க்கும் ஆசையில் கடை உள்ளே நுழைந்தார்.  இவரை...

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.