துகிலில்லாத் தேகத்தை
ஈர வயல்வெளியாய்
கிடத்தியிருக்கிறாய்
மென் ரோமங்களும்,
வியர்வையின் மினுமினுப்பும்
தோலின் நுண்ணிய வரிகளும்
சிலிர்த்தும்
கிளர்ந்தும்
கசிந்தும்
விம்மியும் கிடக்கிறது
பூவுலகின் சிற்றுரு (Miniature)
காளையும்
ஏரும்
கலப்பையும்
உழவனும்
கடவுளும் நானே
என்று கவிகிறேன் உன் தேகம் மீது
அவதாரமாய்
ஈர வயல்வெளியாய்
கிடத்தியிருக்கிறாய்
மென் ரோமங்களும்,
வியர்வையின் மினுமினுப்பும்
தோலின் நுண்ணிய வரிகளும்
சிலிர்த்தும்
கிளர்ந்தும்
கசிந்தும்
விம்மியும் கிடக்கிறது
பூவுலகின் சிற்றுரு (Miniature)
காளையும்
ஏரும்
கலப்பையும்
உழவனும்
கடவுளும் நானே
என்று கவிகிறேன் உன் தேகம் மீது
அவதாரமாய்