'பெண் சிசு பிறந்திருக்கிறது'
இந்த வரிக்கு துக்கம் சேர்த்தது யார்
வாழ்த்துபவர்கள் சிரிப்பு சீக்கிரமே நின்று
வேறு பேச்சு மாறுகிறதே ஏன்
இனியாவது பொறுப்பாக இரு என்று
குற்றவாளிக்குச் சொல்வது போல்
ஏன் சொல்கிறார்கள்
குழந்தையின் மென்சிரிப்பில்
சந்தோஷச் செடிகளைப் பதியனிடும்
கடவுளின் தோட்டமாகிறது என் வீடு
இன்னொருமுறை
தெய்வ நிந்தனைச் சொல்லாதீர்கள்
இந்த சொர்க்கத்தில் நின்றுகொண்டு.
இந்த வரிக்கு துக்கம் சேர்த்தது யார்
வாழ்த்துபவர்கள் சிரிப்பு சீக்கிரமே நின்று
வேறு பேச்சு மாறுகிறதே ஏன்
இனியாவது பொறுப்பாக இரு என்று
குற்றவாளிக்குச் சொல்வது போல்
ஏன் சொல்கிறார்கள்
குழந்தையின் மென்சிரிப்பில்
சந்தோஷச் செடிகளைப் பதியனிடும்
கடவுளின் தோட்டமாகிறது என் வீடு
இன்னொருமுறை
தெய்வ நிந்தனைச் சொல்லாதீர்கள்
இந்த சொர்க்கத்தில் நின்றுகொண்டு.