முந்தாநாளே சொல்லியிருந்தார் ஜோசியர்
உயிர் ஒடுங்கிகொண்டிருப்பதாய்
இன்று
தந்தையைக் கைவிடும்
வார்த்தைகளைச்
சொல்லத்தொடங்குகிறார் மருத்துவர்
பலூனை நிறுத்தினால் பிணம் என்பதை
வேறுவேறு வாய்கள்
வேறுவேறு விதமாகச் சொல்லிவிட்டன
இப்போது
விளக்கைக் குளிர்விப்பதைப் போல
அவர் உயிரை நிறுத்தவேண்டும்
குழாய்ச் சொருகபட்டிருந்த வாயிலிருந்து
வினோத சப்தங்கள் எழுப்பி
நடுங்கும் கரத்தால்
என் கையை இறுகப்பிடித்திருந்தவர்
என்னை நம்பினாரோ உயிர்காப்பேன் என்று
நீங்களும் எவ்ளோதான் செலவு செய்வீர்கள்
பயனும் இல்லாமல் - மந்திரம் போலச் சொல்லபடுகிறது
பணத்தைக் கொட்டினால்
உயிரை மீட்டுவிடும் நவீன
சாவித்திரி மருத்துவமனையில்
காத்திருக்கிறார்கள் சத்யவான்கள்
மருத்துவமனையின் சிறிய கோயிலில்
பொறுப்பற்றுப் படையல் ஏற்கிறார்
பிள்ளையார்
உயிர் ஒடுங்கிகொண்டிருப்பதாய்
இன்று
தந்தையைக் கைவிடும்
வார்த்தைகளைச்
சொல்லத்தொடங்குகிறார் மருத்துவர்
பலூனை நிறுத்தினால் பிணம் என்பதை
வேறுவேறு வாய்கள்
வேறுவேறு விதமாகச் சொல்லிவிட்டன
இப்போது
விளக்கைக் குளிர்விப்பதைப் போல
அவர் உயிரை நிறுத்தவேண்டும்
குழாய்ச் சொருகபட்டிருந்த வாயிலிருந்து
வினோத சப்தங்கள் எழுப்பி
நடுங்கும் கரத்தால்
என் கையை இறுகப்பிடித்திருந்தவர்
என்னை நம்பினாரோ உயிர்காப்பேன் என்று
நீங்களும் எவ்ளோதான் செலவு செய்வீர்கள்
பயனும் இல்லாமல் - மந்திரம் போலச் சொல்லபடுகிறது
பணத்தைக் கொட்டினால்
உயிரை மீட்டுவிடும் நவீன
சாவித்திரி மருத்துவமனையில்
காத்திருக்கிறார்கள் சத்யவான்கள்
மருத்துவமனையின் சிறிய கோயிலில்
பொறுப்பற்றுப் படையல் ஏற்கிறார்
பிள்ளையார்
Comments
Post a Comment