Skip to main content

திகம்பரன் என்ற கட்டுரையில், சாரு நிவேதிதா

பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கி விட்டது இந்தச் சூழலின் அவலங்களில் ஒன்று. அவர் முன்வைத்த ஆயிரத்தோரு விஷயங்களில் ஆயிரம் விஷயங்களை விட்டுவிட்டு , கடவுள் மறுப்பு என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பதோ கொண்டாடுவதோ வெறும் மதியீனமேயாகும். பெரியாரின் கடவுள் மறுப்புக் கட்டுரைகளையும் , பேச்சுக்களையும் வாசித்துப் பார்க்கும் போது அவர் கடவுளை எதிர்த்ததன் காரணம் , கடவுள் கோட்பாட்டின் காரணமாக ஏற்பட்ட ஜாதீய வேறுபாடுகள்தான். அரசனுக்கு ஆலோசனை வழங்க ஒரு ஜாதியும் , மனித மலத்தைச் சுமப்பதற்கு மற்றொரு ஜாதியும் என்ற அவலம் கடவுள் என்ற கோட்பாட்டை முன்வைத்து நடந்ததாலேயே அவர் கடவுளை எதிர்த்தார்.

மற்றபடி பெரியார் சாதி, இனம், மொழி, தேசம், கலாச்சாரம் போன்ற எல்லா அடையாளங்களையும் தாண்டியவர். அதனால்தான் அவர் முப்பதுகளில் ஐரோப்பா சென்ற போது பெர்லினுக்குப் பக்கத்திலுள்ள ஒரு ஊரில் இருந்த நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி அவர்களோடு நிர்வாணமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை அவரது ஐரோப்பியப் பயணம் பற்றிய நூலில் நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் துறவிகளைத் தவிர வேறு எந்த அரசியல்வாதிக்கோ , சிந்தனையாளருக்கோ இந்தத் துணிச்சல் வருமா? இதை அவர் ஒரு கலகமாகச் செய்யவில்லை. மாற்றுக் கலாச்சாரத்தையும் ( Alternate culture), மாற்று வாழ்க்கை முறையையும் அவர் இவ்வாறே ஆதரித்தார்.

இதைத்தான் நான் பெரியாரிடமிருந்து ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் , பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் பாரதியைக் கொண்டாடுவதும் , பெரியாரை முட்டாள் என்று வசை பாடுவதும் இதனால்தான். ஏனென்றால் அவர்களால் தத்தம் குடும்பம் , மொழி , கலாச்சாரம் போன்ற எந்த எல்லைகளையும் தாண்ட முடியவில்லை என்பதே இதற்குக் காரணம்.

 - திகம்பரன் என்ற கட்டுரையில், சாரு நிவேதிதா

Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.