என் படுக்கையில் நீ
நதிபோல மாறுகிறாய்
கூந்தல்
நதியாழத்தின் இருட்டாக
வழிகிறது.
நதிபோல மாறுகிறாய்
கூந்தல்
நதியாழத்தின் இருட்டாக
வழிகிறது.
உன் சுழல்களில் சிக்கிச்
சாவேன் என்று வீழ்கிறேன்
சிறிதுநேரம் நினைவுத்
தப்பித் திரும்புகையில்
நான் வீழ்ந்த இடம் வேறு,
இப்போது கரையேறும் இடம் வேறு
விளையாட்டுக்கு சிறிது
அமிழ்த்திப் புரட்டி பிறகு
மேலெறிகிறாய்
நீந்தியது போதுமெனக்
கரையேற முயன்றால்
முத்தமிடத் தொடங்குகிறாய்
எனக்கு கால்கள் வழுக்குகிறது
களைப்பாகிறேன் சகியே
நதிக்கரைகளில் நாகரீகம்
பிறந்தது என்று சொன்னவனுக்கு சொல்வேன்
ஒரு நதிதான் என் நாகரீகத்தை அழித்தது என்று
சாவேன் என்று வீழ்கிறேன்
சிறிதுநேரம் நினைவுத்
தப்பித் திரும்புகையில்
நான் வீழ்ந்த இடம் வேறு,
இப்போது கரையேறும் இடம் வேறு
விளையாட்டுக்கு சிறிது
அமிழ்த்திப் புரட்டி பிறகு
மேலெறிகிறாய்
நீந்தியது போதுமெனக்
கரையேற முயன்றால்
முத்தமிடத் தொடங்குகிறாய்
எனக்கு கால்கள் வழுக்குகிறது
களைப்பாகிறேன் சகியே
நதிக்கரைகளில் நாகரீகம்
பிறந்தது என்று சொன்னவனுக்கு சொல்வேன்
ஒரு நதிதான் என் நாகரீகத்தை அழித்தது என்று
Comments
Post a Comment