Skip to main content

காமமும்... ரயிலும்....

காமமும் ரயிலும்...
இல்லம் நீங்கும்
நீண்ட பயணத்தில்
மோகவிதை வளரும்
காலம் தண்ணீர்
ஏக்கம் உரம்
அவள் நினைவு வரப்புயர
மோகம் உயரும்
பசியல்ல...
பழகிய ருசிகூட
பந்திக்கு அழைக்கிறது.
*
அன்று முதலிரவில்
ஆரம்பத் தயக்கங்களை
பரஸ்பரம் வென்றோம்
திறப்புவிழா
தொடங்கியது
திறக்கவென்றே மூடப்பட்ட
திரைகள் விலக
முதலில் தரிசித்த
கருப்பு முத்துக்கள் இப்போதும்
என் கருவிழியில்
தேங்கிக் கிடக்கின்றன
*
அவள் கருப்பு
நான் கருப்பு
வேறு வேறு
கருப்பு
அவள் கருப்பிலும்
கொங்கைகள் தனிக்கருப்பு
கருப்பின் நூறுவகை
உள்வண்ணங்களை
எண்ணத் தொடங்கினேன்
தடுத்த விரல்களை
முத்தமிட்டு அடக்கினேன்
கண்ணாடித்தொட்டி மீன்கள்
கள்வனிடமிருந்து
வீட்டைக் காக்க முடியுமா?
*
மெத்தென்ற இதம்
இதத்துடன் தொடுதல் மோகம்
நெற்றியும் கண்களும்
காதுகளும்
கன்னக் கதுப்புகளும்
அவள் எனக்கு ஒதுக்கித் தந்த
முத்தப் பிரதேசங்கள்
அவற்றை நான் ஒதுக்கி விடுவேன்
அதரங்கள்தான் எனக்கு ஈர்ப்பு
அவளின் நான்கு அதரங்களும்
சுவைக்கப் பிரியமானவை
குவளை குவளையாய்
அருந்தினேன் அவளை
அவள் குவளையில் அவளை…
*
சிகரங்களில் தேனெடுக்கும்
தேனீ
சுனைகளில் வாய்வைத்து
அருந்தும் மிருகம்
சாரம்மட்டும் உறிஞ்சி
படையலை விட்டுவைக்கும்
தெய்வம்
நான்
*
சிறு பிராயத்திலிருந்து
ஓய்வெடுத்த படுக்கையில்
இப்போது உழைக்கும் இரவுகள்
*
தளர்ந்து
களைத்து
நிறைந்து
எழுந்து நிற்கிறது
வீட்டு நினைவு.
தடதடக்கும் ரயிலில்
கசங்கிய தினசரியால்
மூட முயல்கிறேன்
சூழலை மீறிப்
புடைப்பது அனைத்தையும்.

Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.