Skip to main content

பேய் கதை - மூஞ்சுறு

சாந்தி படிக்கும் அதே வகுப்பில்தான் பூந்தியும் படிக்கிறான். அவர்கள் பள்ளிக்கூடம் ஊருக்கு வெளியில் களத்துமேடுப் போகும் வழியில் இருக்கிறது. பஞ்சாயத்துக் கட்டிகொடுத்த பாடாவதிக் கட்டிடம். 

வகுப்பில் பையன்கள் ஒன்பது பேர்தான். பெண்கள் பதினைந்துப் பேர் என்பதால் பூந்திக்குப் பயம். பயம் போவதற்காகச் சாந்தி அந்தப் பயல்களை ஆளுக்கொரு மூஞ்சுறு வளர்க்க யோசனைச் சொன்னாள். அன்றிலிருந்து பயல்கள் ஆளுக்கொரு மூஞ்சுறு வளர்த்தார்கள்.

சாந்தியின் தோழி நாமும் வளர்க்கலாமா என்று கேட்டதற்கு, அவனுங்க வளர்க்கிறது போதும் என்று நக்கலாகச் சொல்லிவிட்டாள். தோழி வற்புறுத்தியபோது “உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன் கேள். நான் இந்திரலோகத்து அப்சரஸ். இந்திரனுக்கு பிரியமான நர்த்தகி. என்னைச் சுவர்க்கம் செல்லும் பாதையில், நீச்சல் குளத்துடன் கூடிய மாளிகையில் தங்கவைதிருந்தான். ஒருநாள் நான் நீச்சல் உடையில் நின்றபடி சுவர்க்கம் செல்லும் ஆண்களைக் கிண்டல் செய்துகொண்டிருந்தேன். அப்போது அந்தவழியாக வந்த முனிவர் அதைப் பார்த்துவிட்டார். என்னைப் பூலோகத்தில் பிறந்து ‘ஈவ் டீசிங்’ கொடுமையை அனுபவி என்று சபித்து இங்கே அனுப்பிவிட்டார். எனக்கு இந்திரன் தவிர ஒன்பது காதலர்கள் இருந்தார்கள். அவர்களை மூஞ்சூருகளாக மாற்றி இந்தப் பயல்களைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டேன். எப்படி?” என்றாள்.

“அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்?” கேட்டாள் தோழி.

“நாமெல்லாம் ஒன்றே. என் தேவஅழகை ஒரே பூலோக பெண் சுமக்க முடியாது என்பதால், என் பல பாகங்களின் ஒரு பங்குதான் நீ, வகுப்பில் இருக்கும் மற்ற பெண்கள் என் மிச்ச பாகங்கள்” என்றாள்

“இந்த ஒன்பது லூசு பசங்க யார்?”

“அதான் தெரியலை. இந்திரனின் கைக்கூலிகளாக இருக்கும். எப்படியோ, மேலோகத்தில் இருக்கும் முனிவரை ஏமாற்றி நாம ஜாலியா இருந்தால் சரி” என்றாள் சாந்தி.

பூந்திக்கு மூஞ்சுறு வளர்க்கத் தொடங்கியதும் கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் தன் தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஊருக்குள் இருக்கும் இன்டர்நெட் சென்டருக்குச் சென்றான். “அன்புள்ள முனிவரே, நான் இங்கேயே பாதுகாப்பாக இருப்பேன் என்று இப்போது நம்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட அந்த ராட்சசியை உளவு பார்த்து உங்களுக்கு அவ்வப்போது தகவல் சொல்கிறேன். என் பயம் நீங்கிவிட்டது.” என்று டைப் செய்து, araathu@yahoo.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பினான்

Comments

Popular posts from this blog

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,

பேய்கதை

பூமிகா வாசலில் அமர்ந்து மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா குட்டிப் பெண்ணுக்கு ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். "அம்மா அம்மா, பேய் கதை ஒண்ணு சொல்லுமா"  உடனே, மரகிளைகள் குரங்குகள் நடப்பதைப் போல சலசலத்தது. அம்மா நிமிர்ந்து பார்த்தாள். கிளைகள் மட்டும் குலுங்கின. யாரும் இல்லை. "இப்போ வேணாண்டி. இரவில் நீ பயந்துக்குவே, சாமி கதை சொல்றேன்" என்றாள் டல்லடித்த பேச்சிலர் இளைஞர்களைப் போல சப்தமின்றி கிளைகள் அமைதியாகிவிட்டன.