தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும்
அருகிலிருக்கும் ஆபத்து
மதிமயக்கும் மாயா
பணம் உறிஞ்சும் அட்டை 
குணம் மாற்றும் நெருப்பு
குடிதாக்கும் இடி தீண்டல்
அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம்
அவள் அரவணைப்பில்
மீளாச் சிலரும் என் சிநேகம்
பேய்வீட்டில் வாழநேர்ந்த
மருமகள்போல
தமிழ்த்திருநாட்டில்
குடிக்காதவர்கள்
ஒவ்வொருநாளும்
அவளைக் கண்டும் காணாத
ரிஷிபோலக் கடக்கையில்
தெய்வப் பிரசாதம் என
தருகிறார்கள்
ஒருமடக்குச் சாராயம்
வா விஸ்வாமித்ரா என உள்ளும்
புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை
எனக்குள்.

Comments

Popular posts from this blog

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

பிறழ்வு - கதை 3

வாசிப்பனுபவம் - களவு காமம் காதல்