Skip to main content

சீட்லெஸ்

வருடம் 2114.  ஜெஸிராவுக்கு வேலையும் தனிமையும் அலுப்பாக இருக்கிறது என்று கொஞ்ச நாள் முன்னாடித் திருமணம் செய்திருந்தாள். எல்லோரும் போல நிம்மதியாக, தத்ரூபன் 18+ சர்டிஃபைடு ரோபோ வாங்கியிருக்கலாம்.  உறவில் மென்மையாக கையாளும் லவ் மோட், நீண்ட நேரம் தாக்குபிடிக்கும் பேட்டரி, இடையில் ஹேங் ஆவதில்லை என்றெல்லாம் கேள்விபட்டிருக்கிறாள்.



ஆனால், இவள் சக குழுத்தலைவி மும்தா ரோபோவை வேண்டாம் என்றாள்.   மணவாழ்வில் ரோபோத்தனம் அலுத்துவிடும் என்று க்ளோனிங் மனிதன் ராபர்ட்-டை கடும் சிபாரிசு செய்திருந்ததாள்.  அவளிடமும் ராபர்ட் இருப்பதாக தெரிவித்தாள்.

அதனால், அதிகத் திருமணக் கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் பத்துவருட ஒப்பந்தத்தில் மணம் செய்து அழைத்து வந்திருந்தாள்.  ராபர்ட் பத்து வருடங்களுக்குக் குறைந்து ஒப்புக்கொள்ளவில்லை.  ஜெஸிராவின் ராபர்டை விட இவன் இரண்டு வயது இளையவன்.  இளமையாய் இருந்தான்.  இவளை வலிக்காமல் தூக்கினான்.  நல்ல தேர்வுதான் என்று ஜெஸிராவுக்கு தோன்றியது.

திருமணத்தின் போது அவனும் வசிக்கும்படி 8 x 8 ரூம் மாறிக் கொண்டாள்.   வாடகை அதிகம்தான்.  பரவாயில்லை.   அவனுக்கு படுக்கைக்கு கீழே இணைக்கப்பட்ட டாய்லெட்டை பயன்படுத்த தெரியவில்லை.  நகரத்துக்கு புதியவன்.  ஆனாலும் சந்தோஷமாக இருந்தான்.

வந்த புதிதில் இவளுக்கு சீட்லெஸ் பழங்களை அக்கறையாக ஊட்டிவிடும்போது கிறக்கமாக உணர்ந்தாள்.  உணவுகளை சூடாக்கி கொடுத்தான்.  அசாத்திய திறமைகளை காட்டி அவளை சந்தோஷபடுத்தினான்.   இந்த விஷயத்தில் நிச்சயம் ரோபோ ஈடாகாது.  அவற்றுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லவேண்டும், அவற்றை இயக்க வேண்டும்.

இவ்வளவு இருந்தும் ஒரே வருடத்தில் ராபர்ட் அலுக்க ஆரம்பித்தான்.  அவன் பராமரிப்பு செலவு எக்கச்சக்கமாக ஆகிறது.  ஏற்கனவே திருமணத்துக்காக ஒரு வருட சேமிப்பை இழந்திருந்தாள்.  இந்த பிரச்சனையில் ரோபோ என்றால் சுவிட்ச் ஆப் செய்து ஓரமாக வைத்துவிடலாம். அல்லது வாடகைக்குக் கொடுக்கலாம். இவனை அப்படிச் செய்ய அரசாங்க அனுமதி இல்லை. மேலும், பெண்ணாதிக்கம் என்று என்னன்னெவோ சொல்லி போராடுவான்கள். நிம்மதி கெட்டுவிடும்.  

இன்னும் ஒன்பது வருடங்கள் பாக்கி என்று நினைத்தால், ஜெஸிராவுக்கு கர்ப்பம் ஆனது போல வாந்தி-மயக்கம் வந்தது.  வேறு வழியில்லாமல் மும்தா-விடம் புலம்பிக்கொண்டிருந்த போது "அலட்டிக்காதே, அவன் மூலமா குழந்தைப் பெத்துக்கோ. அதான், எல்லா அனுமதியும் இருக்கே. இந்த அனுகூலத்துக்காகதான் ராபர்ட்டை உனக்குச் சிபாரிசு செய்தேன்.  மேலும்  குழந்தை பிறந்தால், உன் செலவுகள் அனைத்தும் அரசாங்கமே எடுத்துகொள்ளுமே" என்று விளக்கினாள்.

ஜெஸிரா வருத்தமாக "ஏய் லூசு, மறந்துட்டியா, ஃபர்ஸ்ட்-கிரேட் ஆளுக்கு நான் எப்படி ஆசைபடுவது? எனக்கேது பணம்?  ராபர்ட் சீட்லெஸ்" என்றாள் 

Comments

Popular posts from this blog

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்
ஒருத்தியை எல்லை கடந்து நெருங்கிவிடும் தருணத்தில் அவள் வசிகரம் அளவு கடந்து ஈர்க்கிறது - அவள் பேரழகியாகி விடுகிறாள் புதை மணலுக்குள் சிக்கி மூர்ச்சையானவனைப் போல உயிரும் மனமும் ஸ்பரிசத்துடன் ஒன்றி புற உலகை துண்டித்துக் கொள்கிறது உயிர் பிழைத்தலின் இச்சைக்கு நிகரான வெறியூறுகிறது வேஷங்கள் நீர்த்து நிர்வாணம் விரிந்து நதியாகி அவர்களைப் பரிசுத்தமாக்கும் போது கொலைப் பட்டினிகாரர்கள் உணவை புசிப்பது போல நகரீகத்தை மறந்துவிடுகிறார்கள் தம்மை சொர்க்கதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் போது மீண்டும் விதைக்கப்படுகிறது மற்றொரு ஆசை விருட்ச்சத்தின் விதை

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம். சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த ப...