Skip to main content

Posts

Showing posts with the label பெரியோர் சொல்

நினைவுப்பாதை, நகுலன்

நாம் முக்கியம் என்று நினைப்பதெல்லாம் அப்படி முக்கியமில்லை என்று நினைக்கக் கற்றுக் கொள்கிறோமோ அன்று நமது பிரச்சனைகளெல்லாம் பைசலாகிவிடும். ஆனால் இப்படியெல்லாம் சொல்வதெளிது. செய்வதரிது. அவர் அடிக்கடி ஒரு உதாரணம் சொல்வார். உனக்கு வேண்டிய ஆனால் அவசியமில்லாத ஒன்று கைமறதியாக வைத்துவிட்டதால் கிடைக்கவில்லை. அது அப்படியே தொலைந்துப் போனாலும் பெரிய நஷ்டமுமில்லை. விவேகப் பூர்வமாக இனிமேல் சற்று ஒழுங்காக இருக்க வேண்டுமென்பதும், இந்த விஷயத்தை மறந்துவிடவேண்டும் என்பதும்தான் ஞானம். ஆனால் முக்கால்வாசிப் பேர்களும் இப்படியெல்லாம் மனம் உழல்வதால் தாங்களும் உழல்வார்கள். மனோதத்துவம் படித்துபடித்து நமக்குப் பிரச்சனைகள்தான் பிரச்சனைகளின் பரிகாரத்தைவிட முக்கியமாகப்படுகிறது என்பார். ~ நினைவுப்பாதை, நகுலன்

திகம்பரன் என்ற கட்டுரையில், சாரு நிவேதிதா

பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கி விட்டது இந்தச் சூழலின் அவலங்களில் ஒன்று. அவர் முன்வைத்த ஆயிரத்தோரு விஷயங்களில் ஆயிரம் விஷயங்களை விட்டுவிட்டு , கடவுள் மறுப்பு என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பதோ கொண்டாடுவதோ வெறும் மதியீனமேயாகும். பெரியாரின் கடவுள் மறுப்புக் கட்டுரைகளையும் , பேச்சுக்களையும் வாசித்துப் பார்க்கும் போது அவர் க டவுளை எதிர்த்ததன் காரணம் , கடவுள் கோட்பாட்டின் காரணமாக ஏற்பட்ட ஜாதீய வேறுபாடுகள்தான். அரசனுக்கு ஆலோசனை வழங்க ஒரு ஜாதியும் , மனித மலத்தைச் சுமப்பதற்கு மற்றொரு ஜாதியும் என்ற அவலம் கடவுள் என்ற கோட்பாட்டை முன்வைத்து நடந்ததாலேயே அவர் கடவுளை எதிர்த்தார். மற்றபடி பெரியார் சாதி, இனம், மொழி, தேசம், கலாச்சாரம் போன்ற எல்லா அடையாளங்களையும் தாண்டியவர். அதனால்தான் அவர் முப்பதுகளில் ஐரோப்பா சென்ற போது பெர்லினுக்குப் பக்கத்திலுள்ள ஒரு ஊரில் இருந்த நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி அவர்களோடு நிர்வாணமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தை அவரது ஐரோப்பியப் பயணம் பற்றிய நூலில் நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் துறவிகளைத்...