Skip to main content

Posts

Showing posts with the label கடவுளின் கதை

கடவுளின் கதை - சுயம்பு

(Caution: கடும் இலக்கியத் தரத்துடன் :) ) காலத்தின் முதல் புள்ளிக்கு முன் எதுவுமற்று இருந்தது. அண்டம் இல்லை.  காலம் இல்லை. அசைவு இல்லை. வெளிச்சம், இருள், சப்தம்,  நிசப்தம், வாசனை, சுவை, கடவுள், பேய் எதுவுமில்லை. யுகங்கள் என்று எதுவும் இல்லாதபோதே, கோடி கோடி யுகங்கள்  கடந்த சூன்யம், அதன் நிச்சலனம் தன் பிரக்ஞை உணர்ந்த  நொடியில் காலம் தோன்றியது.  காலம் தோன்றிய அந்த புள்ளியில் கடவுளும் தோன்றினார். பிரக்ஞையின் முதல் புள்ளிதான் கடவுள்.  கடவுளுக்கும் 'தான்' இருக்கிறோமா இல்லையா என்ற மயக்கம்.  'தான்' என்று தோன்றிய முதல் அணு, அல்லது அண்டத்தின் முதல் துகள் கடவுளே,  பூரணமடையாத கடவுள். கடவுளுக்கு முதலில் தோன்றிய எண்ணம், தான் தனியாயிருக்கிறோம் என்பதே.  தன்னை சூழ்ந்த நிச்சலனமும், சூன்யமும் கடவுளுக்கு துக்கமாயிருந்தது.  அந்த துக்கம் நீண்டகாலம் தொடர்ந்து இருந்தது.  கடவுள்  தனிமையில் செயலற்று இருத்தல் காலத்தை உறைய வைத்தது. தன் தனிமையை பொறுக்காத கடவுள், தனக்குத்தானே கவனிக்கத் துவங்கினார்.  அவருக்கு புலன்கள் தோன்றின, உணர்வுகள் தோன்றி...