Skip to main content

கூடடைதல்

கவனித்துக் கொண்டிருக்கும்போதே
நிழல்கள் கரைந்து
இருளோடு கலந்துவிடும்
கந்தாலா மலைகிராமத்தில்
அந்திச் சூரியன் சுறுசுறுப்பானது
விரைந்து மறையக் கூடியது

மலைச்சரிவு வனாந்திரத்தில்
அசட்டையுடன் தனியனாக
உங்கள் நிழலை
தொலைத்தவுடன் நீங்கள்
பயம் கொள்கிறீர்கள்

ஓடை சலசலப்பு
முகத்தில் மோதும் பூச்சிகள்
பறவைகள் எழுப்பும் சப்தங்கள்
காலில் மிதிபடும் வினோத மிருதுத்தன்மை

யாவும் பகலிலும் இருந்தவைதான் என்பதை
ஞாபகபடுத்த எவருமற்ற தனிமையில்
உங்கள் பயங்கள் பெருகுகிறது.

உங்கள் உறங்குமிடம் செல்லும் பாதை
இரட்டிப்பாக நீண்டுவிட்டது

கிறுக்குத்தனமான தைரியம்
கிறுக்குத்தனமான பயம்

உங்களுக்கு உதவி கிடைக்கிறது
பழகியறியாத, நாகரீகமற்ற
எதிர்படும் மலைவாசியை உங்களுக்கு
பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது

உங்கள் இடத்துக்கு
அவன் கைகாட்டும் திசையை
நம்புகிறீர்கள்

இன்னும் சிறிது தூரம்,
கூடடைந்த பிறகு பாதுகாப்பில்
இருளும், உலகமும் உங்களுக்கு
மீண்டும் ரம்யமாகிவிடும்

நீங்கள் மிதித்துகொண்டிருக்கும் மென் புற்கள்
வேதனையுறுகின்றன.  அதில் உறங்கிகொண்டிருந்த
புழு இறந்துவிட்டது

நகர்ந்து கொள்ளுங்கள்

புற்கள் பனிக்காற்றில்
மெல்லத் தலைநிமிரும்
ஆனாலும் அவற்றின் மீது படிந்திருக்கும் சேறு
இறுகத்தொடங்கும்


Comments

Popular posts from this blog

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்
ஒருத்தியை எல்லை கடந்து நெருங்கிவிடும் தருணத்தில் அவள் வசிகரம் அளவு கடந்து ஈர்க்கிறது - அவள் பேரழகியாகி விடுகிறாள் புதை மணலுக்குள் சிக்கி மூர்ச்சையானவனைப் போல உயிரும் மனமும் ஸ்பரிசத்துடன் ஒன்றி புற உலகை துண்டித்துக் கொள்கிறது உயிர் பிழைத்தலின் இச்சைக்கு நிகரான வெறியூறுகிறது வேஷங்கள் நீர்த்து நிர்வாணம் விரிந்து நதியாகி அவர்களைப் பரிசுத்தமாக்கும் போது கொலைப் பட்டினிகாரர்கள் உணவை புசிப்பது போல நகரீகத்தை மறந்துவிடுகிறார்கள் தம்மை சொர்க்கதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் போது மீண்டும் விதைக்கப்படுகிறது மற்றொரு ஆசை விருட்ச்சத்தின் விதை

பிறழ்வு - கதை 2

ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், நானும் அவனும், அவன் என் சித்தப்பா, வைப்பூர் ரயில் கிராசிங் தாண்டும் போது எங்கள் பாதையில் ஒரு பிண ஊர்வலம் சென்று கொண்டிருப்பதை பார்த்தோம். பிண ஊர்வலத்தை தாண்டி எப்போது பள்ளிக்கூடம் செல்வது என்று கேட்டான். நான் என்ன செய்வது என்று கேட்டேன். வா இந்த ரயில் தண்டவாளம் ஒட்டியபடி நடந்து போகலாம் என்றான். எங்கள் சைக்கிளை ஒரு புதர் மறைவில் ஒளித்து வைத்துவிட்டு தண்டவாளம் ஒட்டி நடக்கத் தொடங்கினோம். சித்தப்பா என் வயதுக்கு இணையாக இறங்கிவந்து பேசுவான். அதனால் நேர் பேச்சில் அவர் இவர் பயன்படுத்தினாலும் மானசீகமாக அவன் என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால், சேர்வராயன் ஆறு குறுக்கே இருந்த ரயில்வே பாலம் பயமுறுத்தியது. அது துருபிடித்த இரும்பு பாலம். ஒரு வேளை எந்த திசையில் இருந்தாவது ரயில் வந்தால் பாதையை ஒட்டி அமர்ந்து கொண்டால் போதும் ஆபத்து இல்லை என்றான். கம்பிகளின் உடே இருந்த இடைவெளியில், மிக கீழே, ஆறு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் பாலத்தை கடந்து செல்கையில் ரயில்வே கேட் மூடப்படுவதை பார்த்தோம். அவன் என்னிடம் "இரு இப்படி ஓரமா நின்னு ரயில் இந்த ப...