Skip to main content

Posts

ஒருத்தியை எல்லை கடந்து நெருங்கிவிடும் தருணத்தில் அவள் வசிகரம் அளவு கடந்து ஈர்க்கிறது - அவள் பேரழகியாகி விடுகிறாள் புதை மணலுக்குள் சிக்கி மூர்ச்சையானவனைப் போல உயிரும் மனமும் ஸ்பரிசத்துடன் ஒன்றி புற உலகை துண்டித்துக் கொள்கிறது உயிர் பிழைத்தலின் இச்சைக்கு நிகரான வெறியூறுகிறது வேஷங்கள் நீர்த்து நிர்வாணம் விரிந்து நதியாகி அவர்களைப் பரிசுத்தமாக்கும் போது கொலைப் பட்டினிகாரர்கள் உணவை புசிப்பது போல நகரீகத்தை மறந்துவிடுகிறார்கள் தம்மை சொர்க்கதிலிருந்து விடுவித்துக் கொள்ளும் போது மீண்டும் விதைக்கப்படுகிறது மற்றொரு ஆசை விருட்ச்சத்தின் விதை

காமம்

இறுகத் தாழிடப்பட்ட அறையினுள் விடுதலை செய்கிறோம் நம் மிருகங்களை முகர்ந்து ஊளையிட்டு குதறி புணர்ந்து களைத்து ஓய்ந்த சிறு அவகாசத்தில் அகக் கூண்டில் பூட்டிவிட்டு அறைகதவு திறக்கிறோம் பதுங்கிய மிருங்கங்கள் நமது கண்கள் வழியே நமக்குள் தேடுகின்றன அவற்றின் பிம்பங்களை ஒப்பனை மிகுந்த மனதின் அடியாழ இருளில் அமிழ்த்தி  வைக்கிறோம் அவற்றை பத்திரமான கூண்டுகளுடன்

எதிரெதிர் இருக்கைகளில்

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில்  குறும்புடன் கண்ஜாடைக் காட்டிவிட்டு புத்தகத்துக்குள் புகுந்துவிட்டாய் நகராத இரவுடன் நானும் ரயிலும்  போராடிக்கொண்டிருப்போம்

தீண்டல்

மதுப்பற்றி நன்கு தெரியும் அருகிலிருக்கும் ஆபத்து மதிமயக்கும் மாயா பணம் உறிஞ்சும் அட்டை  குணம் மாற்றும் நெருப்பு குடிதாக்கும் இடி தீண்டல் அழிந்த அறிந்த மனிதர்கள் அநேகம் அவள் அரவணைப்பில் மீளாச் சிலரும் என் சிநேகம் பேய்வீட்டில் வாழநேர்ந்த மருமகள்போல தமிழ்த்திருநாட்டில் குடிக்காதவர்கள் ஒவ்வொருநாளும் அவளைக் கண்டும் காணாத ரிஷிபோலக் கடக்கையில் தெய்வப் பிரசாதம் என தருகிறார்கள் ஒருமடக்குச் சாராயம் வா விஸ்வாமித்ரா என உள்ளும் புறமும் கிளர்ந்து எழுகிறாள் மேனகை எனக்குள்.

மனைவி

நிறங்களை விற்பவனிடம் சிறந்ததாக ஒரு நிறம் கேட்டேன் வெண்மையில் தொடங்கி வெளுத்த நிறங்களும் கருத்த நிறங்களும், பிறகு கருப்பில் முடியும் வண்ணங்களின் புத்தகம் காட்டினான் அதில் சிறப்பற்றதேதும் இல்லை தேடி, கற்பனையில் பூசி ரசித்து ஏற்றதென்று வாங்கிவந்த நிறம் வண்ணமயமாக்கியிருக்கிறது வீட்டை என்றாலும் நான் அடைய முடியாத வண்ணங்களின் வசீகரம் ஏக்கப் பூச்சாய் நிறைத்திருக்கிறது மனதை

பேய்கதை - தற்கொலை காட்சிகள்

நள்ளிரவை நெருங்கிகொண்டிருந்த மே மாத இரவு. ஹாஸ்டலில் தம் அடிக்க சிறந்த இடம் என்பதால் மொட்டைமாடி சென்றேன். நிலவின் ஒளிபொழிவு குறைவாக இருந்தது. கைப்பிடி சுவர் மீது அமர்ந்திருந்த இருவர் சட்டென்று வெளியே குதித்து விட்டார்கள். சற்று தொலைவில் அமர்ந்து பேசிகொண்டிருந்ததால் எவரென்று கவனிக்கவில்லை.  மூன்று தளங்கள், படிகளில் தாவி இறங்கி, முதல் தளத்தில் இருக்கும் வார்டன் கதவை  தட்டி தகவல் சொல்லிவிட்டு, கீழே ஓடிவந்தால்... ஒரு பையன் மட்டும் ரத்தம் வெளியேற அசைவற்று கிடந்தான். பிணம்தான். இன்னொரு உடல் அல்லது ஆளைக் காணோம். அந்தரத்தில் நிமிர்ந்து பார்த்தேன் வழியில் எங்கும் தொங்குகிறானா என்று. ம்ஹூம், இல்லை. குழப்பமாக இருந்தது. ரெண்டு பேர் குதித்தார்களே! சொன்னால் யாரும் நம்பவில்லை. பிறகு மொட்டைமாடிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஐந்து மாதம் கழிந்திருக்கும், பக்கத்து ரூம் தினேஷ் நள்ளிரவில் எழுப்பினான். "டேய் குதிச்சிட்டானுங்க" அடுத்த தற்கொலை. இந்த முறை இரண்டு பிணங்கள் கிடந்தன. ஆனால், தினேஷ் என்னை தனியாக அழைத்து, மொத்தம் மூணுபேர் குதிச்சாங்கடா.... இப்போ ரெண்டு பேர்தான் கிடக்காங்க என்றான். எனக்கும்,...

அழைப்பு

உன் திருமணச் செய்தியுடன் வந்த அன்று முத்தமிடப்பட மறுத்தாய் மென்மைத் தொலைத்த உன் இதயம் திகைப்புறச் செய்தது அதுவரை முத்தகங்களை மறுத்தறியாத உன் இதழ்களால் என்னைக் கைவிடும் வார்த்தைகளைக் கசியவிட்டாய் காய்களைப் பழங்களைக் காத்துக்கொள்ள முடியாத சாலையோர மாமரத்தின் கீழ் உதிரம் மொத்தம் பிழியபட்டவன் போல நின்றிருந்தேன் உன் திருமண ஊர்வலம் என் சவ ஊர்வலம் போலத் திகில் நிறைந்திருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது அன்று கொடி போலிருந்தவள் இன்றும் கொடி போல்தான் இருக்கிறாய் . . . . பூசணிக் காய்த்தக் கொடி அன்றைய வெட்கங்கள் இன்று வேட்கையாகி இருக்கிறது அன்று பார்த்தத் தேகம் கற் சிற்பம் இப்போது காண்பது சுதைச் சிற்பம் விரல்களை விடத் தடித்துவிட்டனக் காம்புகள் கைபிடிக்குள் அடங்கவில்லை எந்தபிடியும் தொலைபேசியில் அவர் ஊருக்குப் போயிருக்காரு என்ற கிசுகிசு அழைப்பில் கிளர்ந்தெழுகிறது தோற்ற வலியில் செத்துக் கிடந்த மொத்தக் காமமும்